எகிப்தில் மம்மிக்களுடன் தங்கப் புதையல் கண்டுபிடிப்பு

mummyஎகிப்தில் உள்ள Minya பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்ட போது தோண்டத்தோண்ட மம்மிக்களும், தங்கத்தால் ஆன ஆணிகலன்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எகிப்து நாட்டில் தொடர்ந்து மம்மிக்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன். பழமையான காலங்களில் அந்நாட்டை சேர்ந்த மன்னர்கள், முக்கியமானவர்கள் இறந்தவுடன் அவர்களது உடல்களை பதப்படுத்தி பிரமிடுகளில் புதைத்து வைப்பது அவர்களது வழக்கம்.

ஆண்டு தோறும் எகிப்தில் பல நூறு மம்மிகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அதனால் தொல்பொருள் ஆய்வாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் எகிப்தில் எப்போதும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தற்போது எகிப்தின் மத்திய பகுதியில் உள்ள டவுனா காபால் மாவட்டத்தில் இருக்கும் பழமையான பிரமிடுகளில் 17 மம்மிகளை ஆராய்சியாளர்கள் கண்டறித்துள்ளனர். மம்மிகளுடன் தங்கத்திலான தகடுகளையும் கண்டறிந்துள்ளனர். இந்த மம்மிக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்று இன்னும் கண்டறியப்படவில்லை.

கண்டறியப்பட்ட மம்மிகள் அரச குடும்பங்களை சேர்ந்தவர்கள் போன்று இல்லை. ஆனாலும், இது ஒரு முக்கியமான, அவசியமான கண்டுபிடிப்பு என தொல்ப்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் முதன்முறையாக மம்மிகள் கண்டறியப்பட்டுள்ளன என்று தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் கூறினார்.

-http://news.lankasri.com