வடகொரியாவின் நடவடிக்கை தவறுதான்..ஆனால் இப்படி செய்யக் கூடாது: ரஷ்ய அதிபர் புடின்

வடகொரியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தவறுதான், ஆனால் வடகொரியாவை அச்சுறுத்தக் கூடாது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு பல மாதங்களாக பனிப் போர் நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா, கொரிய தீபகற்பத்துக்கு இராணுவத் தடவாளங்களை அனுப்புவதும், அமெரிக்காவை அச்சுறுத்துவதற்கு வடகொரியா தொடர் அணு ஆயுத சோதனைகள் மேற்கொள்வது என்று இரு நாட்டுக்கும் இடையேயான பிரச்னை தொடர்கதையாக இருந்து வருகிறது

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வட கொரியா, மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை மேற்கொண்டாது.

இந்த ஏவுகணையைக் கொண்டு அமெரிக்க எல்லைக்குள் வட கொரியா தாக்குதல் நடத்த முடியும் என்பதால், இரு நாட்டுப் பிரச்னையும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த சமயத்தில் ரஷ்ய அதிபர் புடின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அணு ஆயுத விரிவாக்கத்தை ரஷ்யா எதிர்க்கிறது.

வட கொரியா நடத்தும் அணு ஆயுத சோதனை மிகவும் ஆபத்தானது மற்றும் பெரும் பாதிப்புகளை விளைவிக்கக் கூடியது.

அதே சமயத்தில், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நாம் அமைதியான ஒரு முடிவை எட்ட என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். அதைவிடுத்து, வட கொரியாவை அச்சுறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

-lankasri.com