தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு கூடுதல் கட்டணம் – அன்புமணி குற்றச்சாட்டு

anbumani-d1தமிழ்நாட்டில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை (இன்று) தொடங்குகிறது. இந்தப் படிப்புகளுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணமாக ரூ.60 லட்சம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மருத்துவ மேற்படிப்புக்கான கல்விக் கட்டணங்கள் ரூ.10 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தன. ஆனால், இப்போது ‘நீட்’ மதிப்பெண்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தான் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதால், மருத்துவ இடங்களை விற்க முடியாது என்பதால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் ஆண்டு கல்விக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றன என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

புதுச்சேரியில் சிகிச்சை சார்ந்த முதுநிலை படிப்புகளைப் பொறுத்தவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.13 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, புதுச்சேரி, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய முறை ஆகியவற்றை பின்பற்றி தமிழகத்திலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள இடங்களுக்கும் அரசே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

-nakkheeran.in

TAGS: