மீசையை முறுக்கு! டிஎல்பியை நொறுக்கு!!

dlp moe4DLP19thphotosஇன்று பின்னேரத்தில் புத்ராஜெயாவில் இருமொழித் திட்டத்தை (டிஎல்பி) எதிர்க்கும் மே 19 இயக்கத்தினர் பேரணி நடத்தினர். நாட்டின் பல பாகங்களிலிருந்து வந்து அங்கு குழுமிய சுமார் 800  மே 19 இயக்கத்தினர் டிஎல்பிக்கு எதிரான கருத்துகளைப் பறைசாற்றும் பல்வேறு பதாகைகளையும் போராட்ட வாசக அட்டைகளையும் ஏந்தி நின்று போர்க்குரல் எழுப்பினர். “டிஎல்பி வேண்டாம், வேண்டாம், வேண்டாம்” என்று உரக்கக் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இடையிடையே மே 19 இயக்கத்தின் பிரதிநிதிகள் டிஎல்பியினால் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றியும் தமிழ்மொழி சிதைவுற்று அழிந்து போகும் நிலை பற்றியும் எடுத்துக்கூறினர்.

 

புத்ராஜெயாவில் குழுமியிருந்தவர்களில் கணிசமான பெண்களும்  இளைஞர்களும்  அடங்குவர். அரசியல்வாதி பகாங் சட்டமன்ற உறுப்பினர் கமாட்சியும் அங்கிருந்தார். தேர்தல் காலத்தில் சுற்றிச் சுற்றி வரும் அரசியல்வாதிகளில் வேறு எவரும் அங்கு காணப்படவில்லை. dlp moe3

 

சரியாக பிற்பகல் மணி 3.15க்கு மே 19 இயக்கத்தின் பேரணி கல்வி அமைச்சை நோக்கி நகர்ந்தது. மீண்டும் இடைவிடாத போர்க்குரல் “டிஎல்பி வேண்டாம்” என்று முழங்கிக் கொண்டிருந்தவர்களின் மத்தியில் காணப்பட்ட இளைஞர்களில் பலர் “மீசையை முறுக்கு, டிஎல்பியை நொறுக்கு” என்று முழங்கத் தொடங்கினர். இது சற்று வேகமாகப் பரவியது. இதனுடன் “புல்லுருவிகளைப் பிடுங்கு” என்ற குரலும் ஒலித்தது.

 

பேரணி கல்வி அமைச்சை வந்தடைந்ததும் போர்க்குரல் மேலும் வலுவடைந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் கல்வி அமைச்சின் பணியாளர்கள் சிலர் வெளியில் வந்து மே 19 இயக்கத்தின் பிரதிநிதிகள் சிலரோடு கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களுக்கு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இடையிடயே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இயக்கப் பிரதிநிதிகள் அங்கிருந்தவர்களின் போர்க்குரலை நிறுத்தி அமைதியாக இருக்குமாறு அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தனர்.

 

பின்னர், மே 19 இயக்கத்தைப் பிரதிநிதித்து ஆர். பாலமுரளி, டாக்டர் செல்வம், ப. பராசக்தி மற்றும் டாக்டர் கோபால் பெருமாள் ஆகியோர் அமைச்சுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அரை மணி நேரத்திற்குப் பின்னர் திரும்பி வந்த அந்நால்வரும் அமைச்சின் அலுவலகத்தில் நடந்ததைச் சுறுக்கமாகக் கூறினர். dlp moe2

 

இன்று வெள்ளிக்கிழமையாதலால், கல்வி அமைச்சர் ஊரில்லை. துணைக் கல்வி அமைச்சர் எங்கோ போய்விட்டார். ஆக, மே 19 இயக்கத்தின் பிரதிநிதிகள் நால்வருக்கும் மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அவர்களைச் சந்தித்த அரசு ஊழியர்களிடம் டிஎல்பி விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், பெப்ரவரி 7 இல், கல்வி அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மற்றும் அதற்கு அவர் அளித்திருந்த பதில் ஆகியவற்றை சுட்டிக் காட்டி, இந்த டிஎல்பி விவகாரத்துக்கு மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியாக பாலமுரளி கூறினார்.

 

மே 19 இயக்கத்தின் பிரதிநிதிகள் கொடுத்த இரண்டாவது கோரிக்கையை ஒரு துணை அமைச்சரின் பணியாளர் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

dlp moe2தொடக்கத்தில், அதாவது 2016 இல்,  டிஎல்பி திட்டத்தில் பங்கேற்ற மனுச் செய்திருந்த 30 தமிழ்ப்பள்ளிகளும் அத்திட்டத்தில் பங்கேற்பதற்கு நிர்ணையிக்கப்பட்ட நான்கு அடைவுநிலைகளை எட்டாததால், அவற்றின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால், நிராகரிக்கப்பட்ட அந்தத் தமிழ்ப்பள்ளிகளும் அடுத்த ஆண்டில் (2017) டிஎல்பி திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இதன் பின்னணியில் இருந்தவர் யார், டாக்டர் இராஜேந்திரனா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாலமுரளி, இதற்கு உறுதியான பதில் அளிப்பது இப்போது சாத்தியமில்லை என்று கூறினார்.