சர்க்கரை நோயாளிகளுக்கு சந்தோஷமான தகவல்

diabetesநீரிழிவு நோயிற்கு பயன்படுத்தப்பட்ட இன்சுலின் ஊசிக்கு பதிலாக புதிய மருந்தை ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை சீரமைக்க இன்சுலின் ஊசி பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த ஊசியானது, நீரிழிவு நோயாளிகளுக்கு கடுமையான உடல் வலியை தான் ஏற்படுத்துகிறது.

இதனால் அடிலெய்டு பல்கலைக்கழக நிபுணர்கள் ஜான் புரூனிங் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சி ஒன்றில் தற்போது இன்சுலின் ஊசி இல்லாமல் நீரிழிவு நோயை குணமாக்க புதிய மருந்தை உருவாக்கியுள்ளார்.

இந்த புதிய மருந்து, கல்லீரலில் உள்ள குளுக்கோஸ் உற்பத்தியாவதை குறைத்து, இன்சுலின் ஊசியை விட முற்றிலும் வித்தியாசமான முறையில் சிகிச்சை அளிக்க கூடியதாக உள்ளது.

-http://news.lankasri.com