இப்படியும் ஒரு கோடீஸ்வரரா? உலகை காப்பாற்ற எடுத்த அதிரடி முடிவு

சுற்றுச்சூழலை பாதுகாக்க கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கு தனது சொத்து முழுவதையும் செலவளிக்க தயார் என நோர்வே நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நோர்வே நாட்டை சேர்ந்த Kjell Inge Rokke என்பவர் தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இவர் சிறுவனாக இருந்தபோது கடலில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்தார்.

பின்னர், 18 வயதான போது அமெரிக்காவிற்கு சென்று பல நிறுவனங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டினார்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் தாய்நாட்டிற்கு திரும்பிய அவர் கப்பல் கட்டுமான நிறுவனத்தை தொடங்கி மேலும் தனது வருமானத்தை பெருக்கி வருகிறார்.

Picture by JENS BUETTNER/AFP/Getty

 இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்து உலக காப்பாற்ற ஒரு அதிரடி திட்டத்தை அவர் அறிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக, சர்வதேச கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற தீர்மானித்துள்ளார்.

இதற்காக 596 அடி நீளத்தில் ஒரு நவீன கப்பலை உருவாக்கி வருகிறார். 60 விஞ்ஞானிகள் மற்றும் 40 கப்பல் சிப்பந்தகளை கொண்டு இப்பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

மேலும், கடலில் கப்பல் இறங்கியதும் ஒவ்வொரு நாளும் சுமார் 5 டன் எடையுள்ள பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை இக்கப்பல் அப்புறப்படுத்தும்.

இப்பணியை முழுமையாக செய்து முடிக்க தன்னிடம் உள்ள 2.6 பில்லியன் டொலரை செலவளிக்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com