மஇகா தலைமையகத்தில் பெர்காசா கொடிகள் பறக்கின்றன

PerkasaflagsatMICமலாய்க்காரர்கள் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசாவின் கொடிகள் மஇகா தலைமையகத்தின்முன் பறக்க விடப்பட்டன. அது மஇகாவிற்கு விடப்பட்ட ஓர் எச்சரிக்கையாகும்.

இந்த நடவடிக்கைக்குத் தலைமையேற்றிந்தவர் பெர்காசாவின் இளைஞர் தலைவர் அஸ்ருல் அக்மால் ஷஹாருடின்.

பறக்கவிடப்பட்டிருந்த அக்கொடிகளின் கீழ் நின்று கொண்டு அஸ்ருல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மஇகாவின் பொருளாளர் எஸ். வேள்பாரிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பெர்காசா இளைஞர்கள் மஇகாவின் துடுக்குத்தனத்தை இனிமேலும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மஇகா போட்டியிடும் எந்த ஒரு தொகுதியிலும் மலாய் முஸ்லிம்கள் அதற்கு வாக்களிக்காமல் இருப்பதை பெர்காசா உறுதிPerkasaflagsatMIC1 செய்யும் என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தில் மஇகாவின் நிலையை மறுபரிசீலனை செய்யுமாறு பிஎன்னை பெர்காசா இளைஞர் கேட்டுக்கொள்ளும், குறிப்பாக சட்டம் 355 மற்றும் ஸக்கீர் நாய்க் விவகாரத்தில் மஇகாவின் கர்வமான போக்கை கவனத்தில் கொள்ளப்படும் என்றாரவர்.

மஇகா போட்டியிடும் பல தொகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மலாய் வாக்காளர்கள் இருப்பதை அவர் நினைவுறுத்தினார்.

வேள்பாரியை கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று அஸ்ருல் மஇகா தலைவர் எஸ். சுப்ரமணியத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதோடு, “நெருப்புடன் விளையாட வேண்டாம்” என்று அவர் கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூறவேண்டும் என்று மேலும் கூறினார்.

பெர்காசாவால் பிரதிநிதிக்கப்படும் மலாய் முஸ்லிம்களால் பெரும் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.