மோடி அரசின் 3 வருட ஆட்சி கோடிகள் அள்ளிய கார்ப்ரேட் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும்

modi45656மோடி அரசின் 3 வருட ஆட்சி இந்தியாவின் பங்கு சந்தையின் மதிப்பு 50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது அதிலும் டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பஜாஜ் குழுமங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளன. நிதி மற்றும் தொழிற்சாலைகள் நிறுவனங்களான எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, எல்அண்ட்டி, வேதாந்தா, கோத்ரேஜ், மகேந்திரா, ஹிந்துஜா மற்றும் ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களும் இந்திய சந்தையில் மோடி அரசு உதவியுடன் பெறும் வளர்ச்சியைப் பிடித்துள்ளன.

அதே நேரம் பொதுத் துறை நிறுவனங்கள் பல நட்டத்தைச் சந்தித்ததுடன், அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களின் சொத்து மதிப்பும் சரிந்துள்ளது.

பொதுத் துறை நிறுவனங்கள் மும்பை பங்கு சந்தையில் 22 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்த போது 3.65 லட்சம் கோடி மட்டுமே லாபம் பெற்றுள்ளன. 3 வருடத்தில் 50 லட்சம் கோடிகள் லாபம் வந்துள்ள நிலையில் இந்து 8 சதவீதம் லாபம் கூடப் பெறவில்லை என்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்திய பங்கு சந்தையில் பொதுத் துறை நிறுவனங்களுக்கு 16 சதவீதம் கணக்குகள் இருந்தும் 3.65 லட்சம் கோடிகள் மட்டுமே லாபம் பெற்றுள்ளன.

மோடி அரசு ஆட்சிக் காலக் கட்டத்தில் பங்கு சந்தையின் வளர்ச்சி

மோடி அரசு ஆட்சிக் காலக் கட்டத்தில் பங்கு சந்தையின் வளர்ச்சி அபரிவிதமாக இருந்துள்ளது, சென்செக்ஸ் 26 சதவீதம் அதாவது 6,000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் பங்கு சந்தைக்கு 75 லட்சம் கோடி வரையிலும், 125 கோடி ரூபாய் வரையிலும் லாபம் பெற்றுள்ளது.

விளம்பரதாரர்கள் கையில் உள்ள லாபம்

எப்படி இருந்தாலும், இந்த மிகப் பெரிய லாபங்களின் பெரிய பாங்கானது, விளம்பரதாரர்களின் கணக்குகளில் உண்மையில் இருப்பதாக அந்த வல்லுநர்கள் குறிப்பிட்டனர், அதே நேரத்தில் வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அடுத்த மிகப்பெரிய பங்கை பெற்றுள்ளனர். விளம்பரதாரர்கள் பெறும்பாலம் கார்ப்ரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ரீடெய்ல் முதலீடு  

இந்தியாவைப் பொருத்தவரை ரீடெய்ல் முதலீட்டாளர்கள் பங்கு மிகக் குறைவாகும், இவர்களது பங்கு மொத்தமாகவே 10 சதவீதம் அதான் இருக்கும் என்றும் அதனால் இவர்களது லாபம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

நகர்ப்புற முதலீடு

செபியால் நிர்ணயிக்கப்பட்ட கணக்கெடுப்பில், நகர்ப்புற இந்தியாவில் சுமார் 8 சதவீத குடும்பங்கள் பங்குகளில் முதலீடு செய்கின்றனர், அதே நேரத்தில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் நிலையும் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.

கிராமப்புற முதலீடு

கிராமப்புற முதலீட்டாளர்களின் பங்குச் சந்தை முதலீடு 1 சதவீதமாகவே உள்ளது. கிராமப்புறங்களில் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர்.

முகேஷ் அம்பானி

மூன்று வருட காலக் கட்டத்தில் முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் நிறுவனம் 1 லட்சம் கோடிகளைப் பங்கு சந்தையில் இருந்து லாபமாகப் பெற்றுள்ளது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சந்தை முதலீடுகள் 30 சதவீதம் உயர்ந்து 4.5 லட்சம் கோடிகளாக உள்ளது.

அனில் அம்பானி

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் ரிலையன்ஸ் கேப்பிடல் மூலமாக நல்ல லாபத்தைப் பெற்ற போதிலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் நட்டத்தைச் சந்தித்துள்ளது.

அதானி

பிரதமர் மோடி நண்பரின் அதானி குழுமம் 30 சதவீதம் அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. அதனால் முதலீட்டாளர்களின் லாபம் 1.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

பிர்லா குழுமம்

குமார மங்களம் பிர்லா குழுமத்தின் பங்கு முதலீடுகளுள் 1 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபம் பெற்றுள்ளது.

பஜாஜ் குழுமம்

பஜாஜ் குழுமத்தின் லாபம் 1.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, அதே நேரம் எச்டிஎப்சி குமத்தின் மூன்று பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் 3 லட்சம் கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளன. அதனால் எச்டிஎப்சி குழுமத்தின் சொத்து மதிப்பு 6.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

டாடா குழுமம்

டாடா குழும பங்குகளின் லாபம் 20 சதவீதம் அதிகரித்து 1.45 லட்சம் கோடி லாபம் பெற்றுள்ளது. அதனால் இவர்களுடைய சொத்து மதிப்பு 8.55 லட்சம் கோடி ரூபாயாகச் சொத்து மதிப்பு உள்ளஹ்டு. டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 92,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வேதாந்தா மற்றும் பிற பிரபல நிறுவனங்கள்

வேதாந்தா குழுமத்தின் லாபம் 75,000 கோடியாகவும், எல்அண்ட்டி நிறுவனத்தின் லாபம் 60,000 கோடியாகவும், கோத்ரேஜ் நிறுவனத்தின் பங்குகள் 50,000 கோடியாகவும், மகேந்திரா குழுமத்தின் லாபம் 35,000 கோடியும் அதிகரித்துள்ளது.

மார்க்கெட் வல்லுநர்கள் கருத்து

மாகேட் வல்லுனர்கள் இந்த எல்லாத் துறை பங்குகள் விலை ஒரே அடியாக இல்லை என்றும் மாற்றம் அடைத்தே வந்துள்ளது என்றும் கூறுகின்றனர். அதனால் அவர்கள் விளம்பரதாரகள் பெயரை வெளியிடவில்லை.

வாடிக்கையாளர்களுக்காக நடந்து கைமாறுதல்

அதே நேரம் ப்ரோக்க்ரேஜ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் நலன் கருதி பங்குகளை மாற்றியும் முதலீடு செய்துள்ளனர். ஆனால் நாம் விசாரித்துப் பார்த்ததன் பின்னியில் வங்கித் துறை சாரா நிறுவனங்கள் பங்குகள் நல்ல லாபம் பெற்றுள்ளதாகவும் முக்கியத் துவம் பொதுத் துறை வங்கி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிகின்றது.

அரசின் சரியான முடிவு

இதைப் பார்க்கும் போது அரசின் முடிவு சரியாகப் பயணிப்பதாகவே பார்க்கப்படுகின்றது, இதனால் பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் சிறிய வங்கிகளுக்கு உதவும் என்று மோடி அரசு திட்டம் திட்டியுள்ளதாக இருப்பின் நாட்டிற்கு நல்லதே. வாரக் கடனால் ஏற்பட்ட சிக்கல்களும் தீர்க்கப்படும்.

tamil.goodreturns.in

TAGS: