எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி அழிந்துவிட்டது: உறுதி செய்த பிரித்தானிய வீரர்

Everestஉலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்த ஹிலாரி முனை அழிந்துவிட்டதாக பிரித்தானியா மலையேற்ற வீரர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் டிம் மோஸ்டைல் என்பவரே இதை உறுதி செய்துள்ளார்.

1953ம் ஆண்டு, முதன்முறையாக நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சர் எட்மண்ட் ஹிலாரி என்பவரின் நினைவாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதிக்கு ’Hillary Step’ என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில் , டிம் மோஸ்டைல் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதவில், ஹிலாரி முனை சரிந்துவிட்டதாக தெரிவித்துள்ள டிம், 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் இதற்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாறை நிறைந்த ஹிலாரி முனை, மலையேறுபவர்களுக்கு ஒரு அரண்போலத் திகழ்ந்தது. தற்போது, இந்தப் பகுதி சரிந்துவிட்டதால், இனி வரும் காலங்களில் மலை ஏறுபவர்கள், பல ஆபத்துகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

-lankasri.com