ஏபி இருக்கிறது, ஆடம்பரக் கார்களை வாங்கினேன், அதில் என்ன தப்பு?- ஸுரைடா கேள்வி

apஎம்பி   என்ற  முறையில்    தமக்குக்  கொடுக்கப்பட்ட    அங்கீகரிக்கப்பட்ட   உரிமங்களை(ஏபி)க்  கொண்டு    இறக்குமதி    கார்களை  வாங்கிப்   பயன்படுத்தி   வருவதாக   பிகேஆர்   மகளிர்    தலைவர்   ஸுரைடா    கமருடின்   கூறினார்.

“எம்பி    என்பதால்    எனக்கு      ஏபிகள்   கொடுக்கப்பட்டுள்ளன.    ஏபி  இருக்கும்போது   அதைப்   பயன்படுத்தாவிட்டால்   முட்டாளாவேன்”,  என்றவர்   சினார்   ஹரியானிடம்   தெரிவித்தார்.

அரசியலுக்கு    வருமுன்னரே   உயர்தர   கார்கள்   வைத்திருந்ததாக    அவர்   கூறினார்.

“அரசியலில்   ஈடுபடுவதற்கு   முன்பே    தரமான  கார்களை   வைத்திருந்தேன்.   நீண்ட-நாள்   உழைக்கக்கூடிய   பொருள்களைத்தான்     எனக்குப்  பிடிக்கும்”,  என்றார்.

இது  தப்பு   என்று  நினைப்பவர்கள்  சரியான  “ஆம்பளயாய்”  இருந்தால்  மலேசிய   ஊழல்   தடுப்பு   ஆணையத்திடம்   புகார்    செய்யட்டும்  என்று  சவால்   விடுத்தார்   ஸுரைடா.