எகிப்தில் முகமூடி அணிந்திருந்த துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 26 கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டனர்

 

Gunmenkill26இன்று கிழக்கு எகிப்தில் ஒரு துறவிகள் மடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு கிறிஸ்துவ குழுவினர் மீது முகமூடி அணிந்திருந்த துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், 25 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பஸ் மற்றும் இதர வண்டிகளில் சென்று கொண்டிருந்த கிறிஸ்தவர்களை நிறுத்தி அவர்களை துப்பாக்கிக்காரர்கள் சுட்டனர் என்று அதனை நேரில் கண்டவர்கள் கூறினர்.

ரமதான் தொடக்க மாதத்தில் நடந்த இச்சம்பவத்திற்கு யாரும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் நடந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் எகிப்திய அதிபர் அப்டெல் ஃபாட்டா, தாக்குதல் நடத்தியவர்கள் நாட்டை பிளவுப்படுத்துவதில் வெற்றிபெற மாட்டார்கள் என்று கூறியதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

எகிப்தின் முஸ்லிம் தலைவர்கள் இக்கொலைகளை வன்மையாகக் கண்டித்தனர்.