மராவியில் கொல்லப்பட்ட இரு மலேசியகள் சமயக் கல்வி கற்றவர்கள் அல்ல, துணைப் பிரதமர் ஹாடி கூறுகிறார்

 

Hamiditheyhadnoreducationபிலிப்பைன்ஸ், மராவி நகரில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தீவிரவாதிகளுக்கும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு படைகளுக்குமிடையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரு மலேசியர்களும் உண்மையான இஸ்லாமியக் கல்வி அறிவு பெற்றவர்கள் அல்ல என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.

அவர்கள் இருவரும் சொர்க்கத்துச் செல்வதற்கான குறுக்குவழியாக ஜிகாட் என்று சொல்லப்படும் செயலைப் பின்பற்றினர் என்று ஹமிடி மேலும் கூறினார்.

“அவர்கள் எவ்வித இஸ்லாமியக் கல்வியையும் பெற்றிருக்கவில்லை, ஆனால் அவர்கள் தியாகிகளாக விரும்பினர்”, என்று இன்று கோலாலம்பூரில் ஒரு குரான் கற்றல் மற்றும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் நிகழ்ச்சியில் பேசுகையில் ஹமிடி கூறினார்.

தெற்கு பிலிப்பைன்ஸில் நடைபெற்ற அச்சண்டையில் கொல்லப்பட்ட 13 தீவிரவாதிகளில் அவ்விரு மலேசியர்களும் அடங்குவர் என்று நம்பப்படுகிறது.