தேசிய-மாதிரி சீனமொழிப்பள்ளிகளில் ஊழல் – கட்டுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது

 

– ஸ்டீபன் இங், மே 30, 2017.

Timetoregulatechineseschoolsதேசிய-மாதிரி சீனமொழிப்பள்ளிகளின் மேலாளர்கள் வாரியம் (மேவா) மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் (பெஆச) ஆகியவற்றில் நிதி சம்பந்தப்பட்ட ஊழல் பிரச்சனைகள் ஏராளமாகி விட்டன. அதற்குக் காரணம் கல்வி அமைச்சின் கட்டுப்பாடுகள் வலிமையற்றவைகளாக இருக்கின்றன.

சீனப் பெற்றோர்கள் அவர்களின் அடுத்த தலைமுறையினரின் கல்விக்காக தங்களின் கடின உழைப்பின் வழி பெற்ற வருமானத்தின் பெருவாரியான பகுதியை நன்கொடையாக அளித்து வருகின்றனர். அதன் வழி பெரும் பணம் திரட்டப்படுகிறது.

இதிலிருந்துதான் பிரச்சனை தொடங்குகிறது. பெஆச-வின் பணம் சந்தர்ப்பவாதிகளுக்கு ஓர் எளிதான இலக்காகி விடுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதில் கைவைத்து விடுகின்றனர். அதைச் செய்வதற்கு அவர்கள் தயக்கம் காட்டுவதே இல்லை.

 

சில உண்மையான பிரச்சனைகள்

 

மேவா அதன் நள்ளாளுமை வழி தலைமைத்துவம் வழங்க வேண்டும். அதற்கு மாறாக, சில தேசிய-மாதிரி சீனமொழிப்பள்ளிகளில், அவைதான் உண்மையான பிரச்சனையாக இருக்கின்றன.

இங்குதான் மேவா, பெஆச மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோருக்கிடையில் சில சமயங்களில் சர்ச்சைகள் எழுகின்றன. நிருவாகத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு கட்டுப்படுத்தும் அமைப்பு (இந்த விவகாரத்தில், கல்வி அமைச்சு), இல்லாதது மிகச் சூடான பிரச்சனைகளை சில சமயங்களில் வெடித்துச் சிதற வைக்கின்றன.

வழக்கமாக, மேவாதான் பள்ளியின் புரவலர்களாக எப்போதுமே இருந்து வந்துள்ளது. அந்நிலை வழி பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் பெஆச ஆகியவற்றின் மீது அது அதிகார உணர்வைக் காட்டுகிறது. அவர்களில் சிலர் மரியாதை அனைவருக்கும் உரித்ததாக இருக்க வேண்டும் என்பதைக்கூட மறந்து விட்டனர்.

இதில் நிலைமையை மிக மோசமாக்குவது, முன்னைய காலத்தில் சீன வணிகர்கள் தாராளமாக சமூகத்திற்கு வாரி வழங்கியது போலல்லாமல், சில வாரியங்கள் முற்றிலும் வேறுபட்ட நோக்கத்தைக் கொண்டிருப்பதாகும்.

ஜியாஸோங் ஆலோசகர் எட்வர்ட் நியோ, “சீனப்பள்ளிகளில் இருக்கும் மேவா, பெஆச-வை எடிஎம் (ATM) இயந்திரங்களாகப் பாவிப்பதை நிறுத்த வேண்டும்”, என்று கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேவாவின் பங்கு மனமாற, கட்டாயமின்றி தன்னிச்சையாக உதவுவதாகும். அது அதன் எல்லைக்குட்பட்ட வணிகர்களிடமிருந்து நிதி திரட்டி தேசிய-மாதிரி சீனப்பள்ளிகளுக்கு உதவுவதற்காக இருக்கிறதேயன்றி, பெஆச-வைப் பயன்படுத்தி பெற்றோர்களிடமிருந்து நிதி திரட்டுவதற்காக அல்ல. இக்காரணத்திற்காக, அவ்வாறான நிதி திரட்டல் திட்டங்களுக்கு பெற்றோர்கள் ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் அவ்வாறு திரட்டப்படும் நிதி மேவா-வுக்குச் செல்கிறது.

ஊழல்கள் ஏராளம் இருக்கின்றன. அவை இப்பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டிய கல்வி அமைச்சின் அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றன.

மன்றங்கள் பதிவகம், நிறுவனங்கள் பதிவகம் அல்லது கல்வி அமைச்சுடன்கூட பதிவு செய்துகொள்ளாத மேவா-கள் இருக்கின்றன.

மேலாளர் வாரிய உறுப்பினராக சேவை செய்வதற்கான அனுமதி பெறுவதற்கு தனிப்பட்டவர்கள் மட்டுமே மனுச் செய்ய முடியும். நியோ அளித்துள்ள தகவல்படி, தேசிய-மாதிரி சீனமொழிப்பள்ளியுள்ள மேவா-களின் பெரும்பாலான உறுப்பினர்கள் கல்வி அமைச்சிடம் பதிவு செய்யப்படாதவர்கள்!

 

தலையிடுதல்கள்

 

நிதி விவகாரங்கள் தவிர, மேவா உறுப்பினர்கள் சில சமயங்களில் பள்ளி நிருவாகங்களில் பிளவுகளை உண்டுபண்ணுகின்றனர். மேவா உறுப்பினர்கள் சில சமயங்களில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெஆச மற்றும் மேவா ஆகியவற்றுக்கிடையிலான உறவில் நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர்.

தேசிய-மாதிரி சீனமொழிப்பள்ளிகளில் மிகப் பெரும்பான்மையானவை கல்வி அமைச்சின் மேற்பார்வைக்கு உட்பட்டவை என்பதை மேவா-கள் மறந்து விடக்கூடாது. அவர்கள் அப்பள்ளிகளின் சொந்தக்காரர்கள் போல் நடந்துகொள்ளக்கூடாது என்பதுடன் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரையும் பெஆச- வையும் கட்டுப்படுத்த முயற்சிக்கக்கூடாது.

பெஆச-வை அமைச்சு அங்கீகரிக்கும் வேளையில், மேவா அமைச்சின் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இயங்குகிறது. உண்மையில், அவற்றின் சேவையை வரம்புக்கு அப்பால் எடுத்துச்செல்ல அவை முற்பட்டால், அவற்றின் பங்கு தேவையற்றவையாகி விடுகிறது.

மேலாளர் வாரியம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி ஆகிய மூன்று தட்டுகளிலும் அதிகாரம் மற்றும் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அது குறித்து முழு விசாரணை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு அமைச்சு அதிகாரிகளுக்கு இருக்கிறது.

 

——————————————————————————————————————————————————————————————

STEPHEN NG is an ordinary citizen with an avid interest in following political developments in the country since 2008.