சிவராசாவுக்கு எதிராக பெர்காசா ஆர்ப்பாட்டம்

 

perkasaaftersivarasaகோத்தா டாமன்சாராவிலுள்ள சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசாவின் அலுவலகத்திற்குமுன் பெர்காசா இளைஞர்கள் கூடி, குதித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அனுமதிக்கப்படாத எவரும் மசூதியிலோ அதன் வளாகத்திலோ பேசக் கூடாது என்று சிலாங்கூர் சுல்தான் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு பணியாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று பெர்காசா இளைஞர் தலைவர் அஸ்ருல் அக்மால் ஷகாருடின் ஓர் அறிக்கையில் கூறினார்.

சிலாங்கூர் சுல்தான் கடந்த வெள்ளிக்கிழமை சிவராசா வரம்பு மீறி விட்டார் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஆனால், சிவராசா அக்குற்றச்சாட்டை மறுத்ததோடு இந்த சம்பவத்தை விளக்கி சிலாங்கூர் சுல்தானுக்கு கடிதம் எழுதப் போவதாக கூறியிருந்தார்.

சிவராசா சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கேட்கத் தவறியதற்காக அவரை அஸ்ருல் சாடினார்.

சிவராசா சுல்தானின் சினத்தை மட்டும் தூண்டிவிடவில்லை, முஸ்லிம்களின் சினத்தையும்கூட என்று அஸ்ருல் கூறிக்கொண்டார்.

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • RAHIM A.S.S. wrote on 5 June, 2017, 10:01

  மசூதி நிர்வாகம் அனுமதித்ததால்தானே முஸ்லீம் அல்லாதவ்ர் மசூதியில் பேசி பேசியிருக்கிறார் என்பதை  கூடவா இந்த ப… உருவத்தில் உலாவும் எ..களுக்கு புரியவில்லை.    
  அப்படி பார்த்தால் மசூதி நிர்வாகமும் சிலாங்கூர் சுல்தான் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு மதிப்பளிக்கவில்லை என்றுதானே அர்த்தம். 
  இந்த ப.. உருவத்தில் உலாவும் எ…கள் ஏன் சிவராசாவின் அலுவலகத்திற்குமுன் கூடிகுடித்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். 
  மசூதி முன்  மசூதி நிர்வாகத்திற்கு எதிராக கூடிகுடித்து ஆர்ப்பாட்டம் செய்யலாமே. 

 • en thaai thamizh wrote on 5 June, 2017, 11:32

  இந்த நாதாரிகளுக்கு உருப்படியான வேலை கிடையாது– ஜாக்கர்த்தாவில் மேயர் அஹோக் போல் சிவராசாவையும் சிறையில் அடைக்கவே எல்லாம். நடந்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம். வழக்கறிஞ்சன் என்ற போர்வையில் நடமாடும் ஈனம் நம்பிக்கை நாயகனிடம் இருந்து பணம் பெற்று அன்வருக்கு எதிராக அரசுக்காக வாதாடிய கேவலம். இப்படி எல்லாம் நடக்கும் போது எதுவும் நடக்கும். நீதி நியாயம் என்பது இந்த ஈனங்களுக்கு புரியாது. மூன்றாம் உலக அந்த மத நாடு– பிறகு எப்படி?

 • rajendracholan wrote on 5 June, 2017, 12:32

  நம் நாடு மலேசியா ஒரு சிறந்த நாடு என்பதை இன்னும் அறியாதவர்கள் இருப்பதைக் கண்டு மிகவும் வேதனையாக உள்ளது. தேர்தல் காலத்தில் மட்டும் தமிழர்களையும் இந்தியர்களையும் கவனத்தில் கொள்ளும் அரசும் ,ம,இ,கா மற்றும் எதிர் கட்சியும் நம்மை ஏமாற்றுவதும் ஏய்ப்பதுமாய் உள்ளதை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  அரசியல் புரியாத சமுதாயமாகவும் ஒற்றுமை இல்லாத சமுதாயம் என்பதை அரசியல் வாதிகள் மட்டுமல்ல மற்ற இனத்தவரும் நம்மை அறிந்து உள்ளனர். நம்மை இழிவாக நடத்துவது இந்த நாட்டில் புதிய ஒன்றல்ல.இதை நாம் முதலில் உணர்ந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும், மாணவர்களும் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும்.சமுதாயத்தை கூறுபோடும் தலைவர்களை புறக்கணிக்க வேண்டும். நாட்டிலே என்ன நடந்தாலும் சமுதாயத்தை இழிவுபடுத்தும் மற்ற இனத்தவர்களை கண்டிக்காத அரசியல் தலைவர்களை புறக்கணிப்பதே சிறப்பு. இந்த நாட்டிலே நம்மவர்களை இழிவுபடுத்தும் பொது மட்டும் அரசுக்கு காது கேளாது .

 • abraham terah wrote on 6 June, 2017, 9:34

  பள்ளிவாசல் அனுமதி கொடுத்துவிட்டது. அதனால் சிவராசா ஒரு மரியாதையின் பேரில் கலந்து கொண்டார். இது தமிழரின் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயம். கூப்பிட்டால் அவர்கள் குரலுக்கு மரியாதை கொடுப்பது நமது பண்பாடு. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

 • en thaai thamizh wrote on 6 June, 2017, 11:26

  ஐயா rajendracholan அவர்களே நீங்கள் கூறுவது பலருக்கு தெரிந்த உண்மை– உண்மைக்கு காலம் ஏது? அத்துடன் எந்த நாடும் சிறந்த நாடாகலாம்– எல்லாம் ஒழுங்காக நடந்தால். மாட மாளிகை கூட கோபுரம் இருந்தால் மட்டும் சிறந்த நாடாக முடியாது– அதில் மனிதாபிமானமும் நீதியும் நேர்மையும் நாணயமும் நடைமுறையில் இருக்க வேண்டும் -பேச்சில் மட்டும் அல்ல.

 • s.maniam wrote on 6 June, 2017, 16:29

  படுத்து கொண்டு எச்சில் துப்பும் முட்டாள்கள் ! சிவராசா அத்து மீறி உள்ளே நுழைந்தாரா !நுழைந்து ஆர்ப்பாட்டம் பண்ணற ! விடுத்த அழைப்பிற்கு மரியாதை செலுத்தினர் ! அவர்கள் அனுமதித்தனர் அவர் சென்றார் ! அதுவும் உங்களுக்கு உரியதை வழங்குவதற்கு சென்றார் ! அவர் எதையும் பெறுவதற்கு அல்ல ! இனி வரும் காலங்களில் இவர்கள் செய்வதை பார்த்தால் ! முஸ்லீம் நண்பர்களில் இல்லங்களுக்கு ராயாவிற்கு செல்வதையே யோசிக்க வேண்டும் போல் தெரிகிறது ! ராய ஓப்பன் ஹவுஸ் ! மலாய் காரர்களுக்கு , குறிப்பாக முஸ்லீம் களுக்கு மட்டும் என்று சட்டம் வந்தாலும் வரும் !!

 • hugt wrote on 7 June, 2017, 7:43

  நிர்வாகிகள் ஹாலைக்காமல் ஒரு சட்டம் தெரிந்த ஒரு தமிழன் பொய்த்திருக்க மாட்டார்

 • en thaai thamizh wrote on 7 June, 2017, 11:01

  70 களில் தேசிய மசூதிக்கு யார் வேண்டுமானாலும் போகலாம் தலையை மூடாமல்-.ஆனால் இப்போது? அந்த மசூதிக்கு இந்தியர்களும் சீனர்களும் எவ்வளவு நன்கொடை அளித்தனர் என்று இப்போதுள்ள நாதாரிகளுக்கு தெரியுமா-இல்லை நடிக்கிறான் களா?

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)