ஹரபான் அதன் பிரதமர் வேட்பாளரை அறிவித்தே ஆக வேண்டும்: கெராக்கன் இளைஞர் தலைவர் வலியுறுத்து

gerakanகெராக்கான்     இளைஞர்     தலைவர்      டான்     கெங்      லியாங்   அடுத்த   பொதுத்   தேர்தலில்   பக்கத்தான்   ஹராபானின்   பிரதமர்   வேட்பாளார்   யார்   என்பதைத்   தெரிந்து   கொள்ள   மிக    ஆர்வமாக    இருக்கிறார்.

அன்வார்   இப்ராகிம்,   தாம்   ஹராபானின்    பிரதமர்    வேட்பாளராக   போட்டியிடுவதற்கு     விரும்பவில்லை     என்று   அறிவித்து   விட்டதை    அடுத்து   டான்-னுக்கு    இவ்வார்வம்   ஏற்பட்டுள்ளது.

“இப்போது  முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்தான்    அவர்களின்   புதிய   தேர்வா?

“இத்   தகவலை    வாக்காளர்களிடமிருந்து   மறைக்க    வேண்டிய    அவசியமில்லை”,  என்றவர்    இன்று   ஒர்     அறிக்கையில்     கூறினார்.

ஏனென்றால்,   இது  “முக்கியமானதும்    அடிப்படையுமான”   ஒரு  விவகாரம்.  பொதுத்   தேர்தலுக்கு   முன்னதாக   ஒவ்வொரு   அரசியல்    கூட்டணியும்    முடிவு   செய்திருக்க   வேண்டிய   விவகாரம்  என்றாரவர்.

“பிரதமர்   வேட்பாளரைக்  கூட   முடிவு    செய்ய  இயலாத   ஒரு   கூட்டணி   நாட்டை   எப்படி   ஆளப்  போகிறது?”,  என   டான்   வினவினார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • angamuthu Vethachalam wrote on 18 June, 2017, 16:28

    அடடா என்ன கரிசனை பக்கத்தான் ஹரப்பான் மீது.நீங்களே அந்த பதவிக்கு போட்டியிடலாம்!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)