நவீன் கொலை வழக்கு: தூக்குத்தண்டனை சாத்தியமல்ல, மூத்த வழக்குரைஞர்கள் கருத்து

Slide11பெத்தாலிங் ஜெயா – தி.நவீன் மரணத்தில் தொடர்புடைய 5 இளையர்களும்  குற்றவியல் சட்டத்தின்கீழ், கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கலாம். ஆனால், கட்டாய மரண தண்டனையை எதிர்கொள்ளும்   சாத்தியம் இல்லை.

சந்தேக நபர்களில் நால்வர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக கட்டாய மரண தண்டனை விதித்தல் அல்லது பதிவு செய்யப்படுவதிலிருந்து 2001 குழந்தைகள் சட்டம் அவர்களைப் பாதுகாப்பதாக மூத்த வழக்குரைஞர்கள் கூறினர்.

கடந்த காலங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், குற்றவியல் சட்டத்தின் கீழான கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டபோதும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, சிறை தண்டனை மட்டும் வழங்கப்பட்டதை வழக்குரைஞர்  கீதன்ராம் வின்சன்ட் நினைவுகூர்ந்தார்.

குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 97 இல் கூறப்பட்டுள்ளது போல் இளவயதினர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஆட்சியாளரின் விருப்பத்தின்படியே தடுத்து வைக்கப்படுவர் என முன்னாள் துணை அரசு வழக்குரைஞர் கூறினார்.

“நவீன் வழக்கு கொலை என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், மரண தண்டனை வழங்க குழந்தைகள் Slide2நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அவர்களில் ஒருவருக்கு 19 வயது, மற்ற நால்வர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டாலும், அவர்களுக்கான தண்டனை குழந்தைகள் சட்டவிதியின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்று வழக்குரைஞர் பால்ஜிட் சிங் சிது தெரிவித்தார்.

கொலைக் குற்றம் என்பதால், அவர்களைப் பிணையில் விடுவிக்க முடியாது. எனவே, இளையோர்களுக்கான தடுப்புக் காவல் சிறையில் அவர்கள் வைக்கப்படுவர் என அவர் மேலும் கூறினார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • TAPAH BALAJI wrote on 18 June, 2017, 20:54

  இப்போது தூக்கில் ஏற்ற முடியாது என்றால் என்ன, 21 வயது வரும் வரை காத்திருந்து தூக்கில் ஏற்ற வேண்டியதுதானே. சாகட்டும் கசமாலம்.

 • subramaniam wrote on 18 June, 2017, 21:56

  கொலை செய்யும் மிருகம் குழந்தை அல்ல ….!

 • மு.த.நீலவாணன் wrote on 19 June, 2017, 2:40

  மனித நேயம் இல்லாத இவர்களின் செயலால் ஒரு தாய் மகனை
  இழந்து தவிக்கிறார் ; மேலும் ஐந்து தாய்கள் மகன்களின் எதிர்காலத்தை எண்ணி தீயில் விழுந்த புழுவாய் துடிக்கிறார்கள் !!!
  அன்பு, பாசம், கருணை , நேர்மை, மனித நேயம், இவைகளை நமது
  பிள்ளைகளுக்கு நாம் கற்று கொடுப்பது குறைந்து விடடதோ என்னவோ !!!

 • Iraama thanneermalai wrote on 19 June, 2017, 6:42

  பெரும்பாலும் இத்தகைய குற்றவாளிகளைப்பற்றி தலைமை ஆசிரியரிடம் கூறினாலும் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பது குறைவு. அது பள்ளியின் பெயரை கெடுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர் .இனிவருக்காலங்களில் இதைப்போன்றவர்களை போலீசில் புகார் செய்ய வேண்டும் .குற்றம் இழைப்பவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட வேண்டும் .

 • மு.ப.கரிகாலன் wrote on 19 June, 2017, 13:22

  அந்த 5 தாய்மார்களும் புழுவாய் துடிக்கிறார்களா! பத்து மாதம் சுமந்து பெற்றடுத்து சீராட்டி, பாராட்டி வளர்த்த தன் அன்பு மகைன ஒரே இரவில் 5 மிருகங்களூம் சேர்ந்து கொத்தி குதறிய அந்த கொடூர காட்சியை நினைத்துப் பார்க்கும் அந்த தாயின் மனம் என்ன துடிதுடித்திருக்கும்.மிருகங்களை பெற்றெடுத்த அந்த தாய்களுக்கு மன வேதைன ஏற்படலாம்.ஆனால் அவை யாவும் பாதிக்கப்பபட்ட அந்த தாயின் மன வேதனைக்கு ஈடாகுமா? அந்த பாதக செயலில் ஈடுபட்ட கொலைகாரர்களுக்கு எந்தவொரு வழக்கறிஞர்களும் துணை போககூடாது.அப்பொழுதுதான் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள கொஞ்சம் குறைக்கலாம்.

 • en thaai thamizh wrote on 19 June, 2017, 14:20

  ஐயா subramaniam அவர்களே — தயவு செய்து மிருகங்களை ஒப்பிட்டு கூறாதீர்கள். மிருகங்கள் இதுபோன்ற ஈனங்களை செய்யாது. ஈன மானிடர்கள் தான் இப்படி பட்ட கேடு கெட்ட செயல்களை புரிவார்கள். மிருகங்கள் அவைகளின் பசிக்காக இயற்க்கை யால் ஏற்படுத்தப்பட்ட வழி முறை -பசிக்காக கொல்வது– ஆனாலும் கொடுமை படுத்தி துன்புறுத்த மாட்டாது.

 • Naatdama wrote on 19 June, 2017, 18:09

  சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்,இவர்களை போன்று மிருகங்களுக்கு குழந்தைகள் சட்டம் வராது,மரணம் மரணம் மரணம்.இது போன்று குற்றம் செய்தால் கட்டாயம் குழந்தைகள் சட்டம் மாறி தூக்கு தண்டனை கிடைக்கும் என்று இது போன்ற  மிருகங்களுக்கு தெரிய வேண்டும்.இல்லையேல் இது போன்ற அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வுகள் பல நடக்கும்.சட்டம் மனிதன் உருவாகிறான்,அதே சட்டத்தை மனிதன் மாற்றி எழுதலாம்.

 • LOGANATHAN wrote on 19 June, 2017, 18:28

  இந்த மக்களை பெற்ற பெற்றோர்கள் திருமுகங்களை காட்டினாள் சிறப்பாக இருக்கும். ஏன் எப்பொழுதுமே இந்த மக்களை பெற்றவர்கள் தற்காத்து சண்டையும் போட்டும் சொல்லுவார்கள் எங்க பிள்ளைங்க தப்பு செய்ய மாட்டனுங்க .

  கூட்டாளிதான் சரியில்லை வாதாடுவாங்க

 • Alex wrote on 20 June, 2017, 14:39

  இந்த 5 பேரையும் தூக்கில் போட்டாள் சிலமணி நேரம்தான் அந்த வலி, இந்த 5 இராட்சசன் ஆயுள் தடனை கொடுக்கவேண்டும் .சிறையிலே இவர் வாழ்கை தான் செயத தவறை உணர்ந்து சிறையிலே சாக வேண்டும்.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)