நீங்க குளிக்கிற தண்ணில, இஞ்சி ஒரு டீஸ்பூன் கலந்து குளிச்சா, உடம்புல பல அற்புதங்கள் நிகழும்!

injiடிடெக்ஸ் (Detox) குளியல் என்பது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அன்றாட வாழ்வில் பல அழுக்குகளை நாம் உடலில் சேர்க்கிறோம். உங்கள் உடலை சுத்தப்படுத்த ஒரு வழக்கமான வழியை உருவாக்குவது அவசியம். நச்சுகள் எல்லா இடங்களிலும் காணப்படலாம், நாம் சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீரில், நாம் எடுக்கும் மருந்துகளில், ஏன் நாம் சுவாசிக்கின்ற காற்றில் கூட. நமது உடலைத் தீங்குவிளைவிக்கும் அசுத்தங்கள் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது முடியாத காரியம்.

ஏன் டிடெக்ஸ் குளியல்?

நிறைய பேர் தங்களுடைய நாளை ஒரு சூடான ஷவரில் குளித்து தொடங்குகின்றனர். அந்த நீரில் கூட நாம் அன்றாடம் பயன்படுத்தும், சோப்பு, ஷாம்பு ஆகியவற்றின் கெமிக்கல்கள் அடங்கியுள்ளன. ஏன் நாம் பல் துலக்கும் பேஸ்ட்டில் கூட ஃபுளூரைடு அடங்கியுள்ளது. குளியலுக்கு பின்னர் கட்டாயமாக நாம் பூச்சிக்கொல்லிகள் அடித்து விளைந்த காய்கறிகள் அல்லது மரபணு மாற்றப்பட்ட உணவுகளை தான் எடுத்துக்கொள்ள போகிறோம். நீங்கள் வீட்டில் இருக்கும் போதே இவ்வளவு நச்சுக்களை உடலில் சேர்த்து வைத்துக்கொள்கிறீர்கள். எனவே இந்த நச்சுக்களை நீக்க கட்டாயம் ஒரு தீர்வு தேவை. அதற்கான தீர்வு தான் டிடெக்ஸ் குளியல்.

இஞ்சி குளியல்

டிடெக்ஸ் குளியலில் மிகவும் நல்ல பலன்களை தருவது, இஞ்சி குளியல். இது உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள மட்டும் அல்ல. உங்களது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கவும் உதவுகிறது. இஞ்சி பல ஆரோக்கியமளிக்கும் பண்புகளை உள்ளடக்கியுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகமாக உள்ளன. இது அழற்சியை தடுக்கிறது. தினமும் இஞ்சி குளியல் எடுப்பது கோளரெக்டல் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு நோயிலிருந்து நம்மை காக்கும்.

இஞ்சி குளியல் எப்படி எடுப்பது?

தேவையான பொருட்கள்
அரைகப் புதிய இஞ்சி அல்லது ஒரு மேசைக்கரண்டி அளவு இஞ்சி பவுடர். தாங்கும் அளவு சூடான நீரால் நிரப்பப்பட்ட குளியல் தொட்டி ஒரு கப் பேக்கிங் சோடா.

எவ்வாறு தயார் செய்வது?

தாங்கும் அளவு சூடான நீரால் குளியல் தொட்டியை நிரப்ப வேண்டும். இஞ்சி மற்றும் பேக்கிங் சோடாவை அதில் நிரப்ப வேண்டும். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.

குறிப்பு:

இந்த குளியலுக்கு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அதிக அளவு வியற்வை வெளியேறும் எனவே நீங்கள் இந்த குளியலை காலையில் எடுப்பதை விட இரவில் எடுப்பது சிறந்தது. இந்த குளியலால் உங்களது சரும துளைகள் விரிவடையும் என்பதால் சோப்புகள் அல்லது ஷாம்புகளை உபயோகப்படுத்த வேண்டாம்.

-http://poptamil.com