பணவீக்கம் எகிறும், மக்களின் இரத்தம் கொதிக்கும்: ரபிசி எச்சரிக்கை

gstபணவீக்கம்    எகிறப்போவது    என்பதில்   ஐயமில்லை.   புத்ரா   ஜெயா  60  அடிப்படைப்   பொருள்களுக்கு   பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)   விதிக்க   விரும்புவதுதான்   இதற்குக்   காரணம்  என்கிறார்   பிகேஆர்   உதவித்    தலைவர்   ரபிசி    ரம்லி.

ஒரு   தேர்ந்த  கணக்காளருமான      ரபிசி,    இதன்  விளைவாக   பொருளாதாரப்   பாதிப்புகள்   ஏற்பட்டு   மக்கள்   கொதித்தெழுவார்கள்   என    எச்சரித்தார்.

“அவற்றில்   ஒரு   பகுதி    இறக்குமதி    செய்யப்படும்    பழங்களும்   காய்கறிகளுமாகும்    என்றாலும்   பெரும்பாலான   மலேசியர்கள்   பயன்படுத்தும்   அடிப்படை   உணவுப்  பொருள்களும்   அவற்றில்     அடங்கும்”,  என்றாரவர்.

6  விழுக்காடு   ஜிஎஸ்டி  விதிக்கப்படும்   அப்பொருள்களில்   உருளைக்கிழங்கு, பயிற்றங்காய், பட்டாணி,  பசலைக்கீரை,  சோளம்,  பல்வகை  noodleகள்,   தேங்காய்   எண்ணெய்   முதலியவை   அடங்கும்.

“உணவுப்   பொருள்களுக்கு     ஜிஎஸ்டி   விதிப்பது   மக்களின்   கோபத்தைத்தான்   தூண்டிவிடும்    எனப்   பிரதமருக்கு    எச்சரிக்கிறேன்”,  என்று  கூறிய   ரபிசி    அரசாங்கம்   அதன்   முடிவைக்   கைவிட    வேண்டும்     எனக்    கேட்டுக்கொண்டார்.