இசா சமட் எப்ஜிவி தலைவர் பதவியை இழக்கிறார்?

fgvஇன்று   பெல்டா  குளோபல்   வெண்ட்சர்ஸ்   ஹொல்டிங்ஸ்  பெர்ஹாட் (எப்ஜிவி)   தலைவர்   முகம்மட்  இசா   சமட்   அப்பதவியிலிருந்து   தூக்கப்பட்டு    அவருக்குப்   பதிலாக     டெலிகோம்   மலேசியா     தலைவர்    சுலைமான்     மஹ்பூப்    அப்பதவியில்    அமர்த்தப்படுவாராம்.
பெரித்தா   ஹரியானும்    நியு   ஸ்ரேட்ஸ்   டைம்சும்   இதைத்    தெரிவித்துள்ளன.

நேற்று,    த   ஸ்டார்   நாளேடு    எப்ஜிவி    தலைமையில்    மாற்றம்    தேவை    என்று     கூட்டரசு    நில  மேம்பாட்டு    நிர்வாக (பெல்டா)த்தின்     தலைவர்     ஷாரிர்  அப்துல்  சமட்       கூறியதாக     அறிவித்திருந்தது.

அதன்   தொடர்பில்   எந்த   முடிவெடுப்பதாக   இருந்தாலும்,  நிதி  அமைச்சின்வழி   அதில்   பெரும்பகுதி   பங்கு   வைத்துள்ள   அரசாங்கம்தான்   செய்யும்   என்றாரவர்.