கவர்ச்சிகரமான காய்கறிப் பெயர்களுக்கும் உடல் நலனுக்கும் என்ன தொடர்பு?

kavarchiகாய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என அனைவருக்கும் தெரியும் ஆனால். எப்படி ஒருவரை அதிகமான காய்கறிகளை உண்ண வைப்பது? காய்கறிகளுக்கு “கவர்ச்சிகரமான பெயர்களை” கொடுப்பது அதற்கு வழிவகுக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்டான்ஃபடில் உள்ள ஆராய்ச்சிக் குழு ஒன்று, பல்கலைக்கழக உணவகத்தில் காய்கறிகளுக்கு சுவாரஸ்யமான பெயர்களை வைத்து விற்பனை செய்ததில் அதன் விற்பனை 25 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கவர்ச்சிகரமான கேரட்…

இலையுதிர் கல்விக் காலம் முழுவதிலும் மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் காய்கறிகளை இந்த நான்கு விதமான பெயர்களை கொண்டு பரிமாறினர்

இயல்பான பெயர் – `கேரட்` என்று நேரடியாக பெயரிடுதல்

கட்டுப்பாடுடன் கூடிய ஆரோக்கிய பெயர் – `கேரட்டும் சர்க்கரை இல்லாத எலுமிச்சையும்`

நேர்மறையான ஆரோக்கிய பெயர் – `வைட்டமின் சி நிறைந்த கேரட்டுகள்`

சுவாரஸ்யமான பெயர் – `அசத்தலான எலுமிச்சை கேரட்`.

இதே மாதிரியாக பீட்ரூட், பட்டர் நட், சோளம், பச்சை பட்டானி, வெள்ளரிக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு என அனைத்துக் காய்கறிகளும் கவர்ச்சிகரமான பெயர்களை கொண்டு, ஒரு வாரம் முழுக்க விற்பனை செய்யப்பட்டது.

ஒவ்வொரு நாளும் மாணவர்கள் எவ்வளவு காய்கறிகளை எடுத்தனர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர்.

அவ்வாறு கணக்கிடப்பட்டதில் சுவாரஸ்யமான பெயர்கள் வைத்த காய்கறிகள் முதலாவதாக இருந்தன. அதில், `தனித்துவமான பூண்டு இஞ்சி கலவையுடன் பட்டர்நட் சேர்த்த குடைமிளகாய்`, `காரசாரமான பச்சைமிளகாயுடன் புளிப்பு தூக்கலான பீட்ரூட்` ஆகியவை அடங்கும்.

எனவே இம்மாதிரியான கவர்ச்சியான பெயர்களை வைத்த காய்கறிகள் இயல்பான பெயரை வைத்து விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளைக் காட்டிலும் 25 சதவீதமும், கட்டுப்பாடான ஆரோக்கிய உணவுகளை காட்டிலும் 41 சதவீதமும், நேர்மறையான ஆரோக்கிய பெயர் வைக்கப்பட்ட உணவைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகமாகவும் விற்பனையாகியுள்ளது.

உணவு தேர்வுகளுக்கு அடிப்படையாக உள்ள மனப்போக்கை கருத்தில் கொண்டு இந்த ஆய்வை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலானோர் உணவின் சுவையை பொறுத்தே அதை தேர்வு செய்கின்றனர் பலர் ஆரோக்கியமான உணவு ருசியாக இருக்காது என நினைத்துக் கொள்கின்றனர் என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

காய்கறிகளின் பெயர்கள், நாம் உணவை தேர்ந்தெடுப்பதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதை வைத்து அது எந்தளவு ருசியானது என்றும் மக்கள் தீர்மானிக்கின்றனர்.

“எனவே நாங்கள் காய்கறிகளுக்கு சுவாரஸ்யமான பெயர்களை வைக்க தீர்மானித்தோம். நாம் நிறைய காய்கறிகளை உண்ண வேண்டும் என நமக்கு தெரிந்திருந்தாலும் வெகு சிலரே போதுமான காய்கறிகளை உண்கிறோம்”. என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக ஒரு நாளில் 400கிராம் அளவில் ஐந்து விதமான பழங்களை நாம் உண்ண வேண்டும்; ஆனால் பிரிட்டனில் 18 வயதை கடந்த கால்வாசி பேர்தான் அதை சரியாக எடுத்துக் கொள்கின்றனர்.

பிரிட்டனில் உள்ள போன்மத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹார்ட்வெல் என்ற பேராசிரியர், மக்களை அதிகமாக காய்கறிகளை உண்ண வைக்கக்கூடிய திட்டங்களை வடிவமைக்கும் `வெஜ்ஜி ஈட்` என்ற திட்டத்தை முன் நடத்துகிறார்.

காய்கறிகளை அதிகமாக உண்ண வைப்பதற்கான ஒரே ஒரு வழிமுறை அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒருவர் காய்கறிகளை எடுத்துக் கொள்வதற்கான வழிகளை நாம் அதிகரிக்க முடியும் என்கிறார் ஹார்ட்வெல்.

`மறைமுகமாக காய்கறி`

பலர் ஆரோக்கியமான உணவை கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்.

தொந்தரவு செய்து, மறைமுகமாக மக்களை காய்கறிகளை உண்ண வைப்பதில் ஹார்ட்வெல் கைதேர்ந்தவர்.

சூப்பர் மார்க்கெட் கடைகளில் ருசிகரமான உணவின் படங்களை ஒட்டுவதன் மூலம் மக்களை பழங்கள் சார்ந்த உணவை வாங்க வைக்க முடியும்.

சிலர் தங்கள் நண்பர்களை கவர்வதற்காக ஆரோக்கியமான உணவை வாங்குவார்கள் என்று தெரிவிக்கிறார் ஹாட்வெல்.

காய்கறிகளை தேர்ந்தெடுக்க வைப்பது கடினமான விஷயம்தான். ஆனால் இந்த ஆய்வில் காய்கறிகளுக்கு கவர்ச்சிகரமான பெயர்களை வழங்குவதன் மூலம் அதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என தெரியவந்துள்ளதாக கூறுகிறார் ஹாட்வெல். -BBC_Tamil