ஹராபான் தலைவர் விசயத்தில் பெர்சத்து ‘விட்டுக்கொடுக்கத் தயார்’

bersatuபார்டி    பிரிபூமி    பெர்சத்து மலேசியா (பெர்சத்து)     பக்கத்தான்   ஹராபானுக்குப்  புதிய   தலைமையை   ஏற்கத்   தயாராக  உள்ளதாய்   அதன்   தகவல்    தலைவர்   கமருடின்   முகம்மட்  நோர்    கூறினார்.

ஹராபானுக்கு  நிர்வாகத்   தலைவரும்    தலைவரும்   தங்கள்   கட்சியைச்  சேர்ந்தவர்களாகத்தான்   இருக்க    வேண்டும்    என்று  பெர்சத்து    விரும்புவதாகக்    கூறப்படுவதை     அவர்  மறுத்தார்.

“நிர்வாகத்    தலைவராக   டாக்டர்   மகாதிர்   இருக்கலாம்  என்பது  மட்டுமே   எங்களின்  நிலைப்பாடு    என்பதைத்   தெளிபடுத்த   விரும்புகிறேன்”,  என்றாரவர்.

தொடக்கத்தில்    (பெர்சத்து   தலைவர்)  முகைதின்   யாசினை    ஹராபான்   தலைவராக்கலாம்   என்று    மொழிந்தது     உண்மைதான்    என்று   கூறிய   கமருடின்,    தேர்தல்   இயந்திரத்தை    நடத்தும்   அனுபவம்     அவருக்கு   இருப்பதால்  அப்படிச்   சொன்னதாகக்  குறிப்பிட்டார்.

“ஆனால்,  எல்லாருடனும்   ஒத்துப்போகும்   வகையில்   ஹராபான்   தலைவர்   விவகாரத்தில்   பெர்சத்து   விட்டுக்கொடுக்க    ஆயத்தமாக  உள்ளது”,  என்றவர்   இன்று   ஓர்     அறிக்கையில்    கூறினார்.