டிஓஜே வழக்குகள்: தேர்தலில் ‘அன்னியர் தலையீடு’ என்று ஹாடி கண்டனம்

ahadiஅன்னியர்   தலையீடு   நாட்டுக்குக்  கெடுதலைதான்   கொண்டு   வரும்  என்பது   வரலாறு   புகட்டும்   பாடமாகும்   என்கிறார்   பாஸ்   தலைவர்   அப்துல்  ஹாடி    ஆவாங். மலாக்கா   அரசின்    வீழ்ச்சி   இதற்கு   ஓர்   எடுத்துக்காட்டு.  இப்போது   1எம்டிபி   தொடர்பில்    வெளிநாடுகள்   தொடுக்கும்    வழக்குகள்.

மலேசிய   விவகாரங்களில்    அன்னியர்   தலையீட்டை    விரும்புவோரின்   செயல்   கண்டிக்கத்தது     என்றாரவர்.

“அன்னியர்   தலையீட்டை   வரவேற்பவர்கள்    தேர்தலில்     வெற்றிபெறத்தான்    அதைச்   செய்கிறார்கள்.  அவர்களின்    செயல்    விசுவாசமற்றது,  கண்ணியமற்றது”,  என   எல்லாக்  கட்சிகளுக்குமாக    அவர்    எழுதிய   திறந்த     மடலில்    கூறினார்.

மலேசிய   ஊழல்    அது    எவ்வளவு    மோசமானதாக     இருந்தாலும்   உள்நாட்டு   அளவில்தான்   அதற்குத்    தீர்வு    காண    வேண்டும்   என்றாரவர்.