திருக்குறளும் சமயமும்

-கி. சீலதாஸ், வழக்குரைஞர்,  ஜூலை 1, 2017.

siladassஒரு  சிலர்  திருவள்ளுவரை  இந்து  சமயவாதியாகக்  காட்ட  முற்படுவதும்,  திருக்குறளை  இந்து  சமய  நூல்களில்  ஒன்று  என  பறைசாற்றுவதும்  இயல்பாகி  வருகிறது.  இது  காலங்காலமாக  நிகழ்வதாகும்.  திருவள்ளுவரைப்  பற்றி  எழுதியவர்கள்  அவர்  சைவசித்தாந்த  சமயத்தைச்  சேர்ந்தவர்  என்றும்  மேலும்  பலர்,  அவர் சமணர்  என்பார்கள்.

தமிழில்  வந்துள்ள  பெரும்பான்மையான  நூல்கள்  கடவுள்  வாழ்த்துடன்  ஆரம்பிப்பது  வழக்கிலிருக்கும்  மரபைக்  குறிக்கிறது.  நூல் ஆசிரியர்  எந்தக்  கடவுளை  வழிபடுகிறாரோ  அந்தக்  கடவுளை  வாழ்த்தி  தம்  கருத்துப்படைப்பை  ஆரம்பிப்பதும்  இயல்பே.

திருவள்ளுவர்   எந்தச்  சமயத்தையும்  சாராதவர்  என்பதற்குச்  சான்றாக  விளங்குவது  முதல்  குறள்:

“அகர  முதல  எழுத்தெல்லாம்  ஆதி

பகவன்  முதற்றே  உலகு.”

இதில்,  “ஆதிபகவன்”  என்பதின்  பொருளானது  பொதுவான  ஒரு  சக்தியை   குறிக்கிறது  என்கிறார்கள்.  அதாவது,  எழுத்தெல்லாம்  எவ்வாறு  அகரத்தை  முதல்  எழுத்தாக  கொண்டிருக்கிறதோ  அதுபோலவே  உலகம்  அமைவதற்கு  ஆதிபகவன்  மூலமாக  இருந்தார்  என்பதாகும்.  இங்கே  ‘ஆதிபகவன்’  என்கின்ற  ஆதியும், பகவனும்  ஆகிய  இருவரை  ஒன்றாக  காட்டும்  சொற்பாங்கு   என்ற  கருத்தும்  உண்டு.  ஆதியும்  பகவனும்  ஒன்றே  என்பது  மற்றொரு  கருத்து.    இரு  சொற்களான  ஆதியும்  பகவனும்  ஆதிபகவனாக ஒன்றித்துவிட்டனர்.  எனவே  இறைவன்  ஒன்றே  என்பதை  முதல்  குறள்  விளக்குகிறது  என்ற  கருத்து  பொருத்தமாக  தென்படுகிறது.  எனவே  ஆதிபகவன்  என்று  திருவள்ளுவர்  சொன்னபோது  சமயமுலாம்  பூசப்படாததைக்  காணமுடிகிறது.  ஓர்  உன்னத  சக்தியை  மட்டும்  விவரிக்கிறார்  திருவள்ளுவர்  என்று  சொன்னால்  தகும்.  “ஆதிபகவன்”  என்பதை  வைத்து  திருவள்ளுவரின்  மதசார்பற்ற  நிலையை  மாற்ற   காட்டப்படும்  உற்சாகம்  வியக்கச்செய்கிறது.

திருக்குறளில்  மனித  குலம்  சிறப்புடன்,  கன்னியத்துடன்,  அறம்பேணி  நிம்மதியாக  வாழ்வதற்கான   அறிவுரைகள்  சொல்லப்பட்டிருக்கிறதே  அன்றி  அதில்  மந்திரம்,  மாயஜாலம்,  ஜாதி,  மதம்  எதுவுமே  கிடையாது.

மனித  குலம்  உய்வு  பெற  வேண்டும்  என்ற  உயரிய  நோக்கமே  திருவள்ளுவரை  ஆட்கொண்டிருந்தது  என்றும்  சொல்லலாம்.  இதனால்  எல்லா  சமயத்தினரும்  திருக்குறளில்  சங்கமத்தைக்  காணமுற்பட்டதையும்  சரித்திரம்  வழங்கும்  சான்றாகும்.

கிறிஸ்துவப்  பாதிரியார்  பெஸ்கி,  இவரை  வீரமாமுனிவர்  என்றழைப்பர்,  திருக்குறளை  முதன்  முதலில்  லத்தீனில்  மொழியாக்கம்  செய்தவர்.  பத்தொன்பதாம்  நூற்றாண்டின்  பிற்பகுதியில்  ஆங்கிலத்தில்  மொழியாக்கம்  செய்தவர்  டாக்டர்  ஜி.யு.போப்.  இவரை  ‘போப்பைய்யர்’  என்றும்  அழைப்பர்  தமிழறிஞர்கள்.

ஜி.யு.போப்  திருக்குறளை  மட்டுமல்லாது,  மாணிக்கவாசகரின்  திருவாசகம்,  நாலடியார்  ஆகியவற்றையும்  ஆங்கிலத்தில்  மொழியாக்கம்  செய்துள்ளார்.  திருவாசகம்  சைவ  சமயத்தை  ஒட்டியது  என்பதை  போப்  சுட்டிக்  காட்டுகையில்  அதில்  பொதிந்திருக்கும்  எழில்  ததும்பும்  கருத்துக்களை  படித்து  மகிழ்ந்து  மற்றவர்களும்  அதன்  எழிலை  அனுபவிக்க  வேண்டும்  என்றார்.  நாலடியாரின்  கருவூலமோ  புத்த  சமயத்தைச்  சார்ந்தவர்  இயற்றியதாகக்  கூறுகிறார்.  இவ்வாறு  வெள்ளைக்காரர்கள்  என்ன  சொல்கிறார்கள்  என்பதில்தான்  நம்  கவனம்.

பல  ஆய்வுகளைப்   படிக்கும்போது  எது சமயச்  சார்புடைய  நூல்,  எது  சமயச்  சாயல்  சார்பற்றது   என்பதை  அறிய  முடிகிறது.  திருக்குறள்  சமயச்  சாயலற்ற  நூல்  என்பதே  ஒருமித்த  கருத்து.

முத்தமிழ்க்காவலர்  கி.ஆ.பெ.விசுவநாதம்  ஒரு  சம்பவத்தைச்  சொல்வார்.  தம்முடைய  முஸ்லிம்  நண்பர்  ஒருவர்  தம்மிடம்  வந்து  “இந்த  ‘ன்னன்னா’  என்ன  செய்தது?”,  என்று  கேட்டுவிட்டு,  “திருக்குரான்”  என்பதை  மாற்றி  “திருக்குறள்”  என்று  எழுதிவிட்டார்கள்  என்பாராம்.  திருக்குரான்  இஸ்லாம்  சமயத்தைச்  சார்ந்த  நூல்.  திருக்குறளைப்  படிப்பத்தில்  முஸ்லிம்கள்  தயங்காதது,  அதில்  மனித குலத்துக்குத்  தேவையான  கருத்துக்கள்  இருப்பதை  ஏற்றுக்கொண்டதையே  சுட்டுகிறது.

இந்தக்  கருத்துகள்  எல்லாம்  ஒரு  பக்கம்  இருக்க,  திருவள்ளுவர்  ஒருவர்  மட்டும்  திருக்குறளை  எழுதியிருக்க  முடியாது,  ஒருவேளை,  ஒரு  குழுவின்  தலைவராக  அவர்  இருந்திருக்கலாம்.  அந்தக்  குழுவின்  தயாரிப்பே  திருக்குறள்  என்ற  கருத்தும்  நிலவுகிறது.  திருவள்ளுவரைப்  பற்றி  பல  கதைகள்  பரவிவருவதையும்  ஒதுக்கிவிடமுடியாது.  திரு.வி.க (திரு.வி.கல்யாணசுந்தரம்)  திருவள்ளுவரைப்  பற்றி   பரவி  கொண்டிருக்கும்  கதைகளை  ஏற்றுக்கொள்ள  தயக்கம்  காட்டினார்.

திருக்குறளில்  காணப்படும்  கருத்துக்கள்  புதுமையானவையா  என்ற  கேள்வியும்  எழுந்தது.  அந்தக்காலத்தில்  பழக்க  வழக்கங்களை,  நெறிமுறைகளை  தொகுத்துத்  தந்தார்  திருவள்ளுவர்  என்று  சொல்வோரும்  உண்டு.

இருபதாம்  நூற்றாண்டில்,   விபரீதமான  ஒரு கருத்தை  வெளியிட்டார்  எம்.தேவநாயகம்  என்பவர்.  இவர்  இந்து  சமயத்தைவிட்டு  விலகி  கிறித்துவ  மதத்தை  தழுவிக்கொண்டவர்.  இவர்,  திருவள்ளுவர்  ஒரு  கிறிஸ்தவரா?  என்ற  தலைப்புடைய  நூலை  வெளியிட்டார்.  அவரின்  கருத்துப்படி  அருட்தொண்டர்  தாமஸ்,  திருவள்ளுவரை  கிறித்துவ  மதத்திற்கு  மாற்றினார்  என்பதாகும்.  திருக்குறளில்  உள்ள  பல  கருத்துக்கள்  விவிலியத்தில்  இருந்து  எடுக்கப்பட்டவை  என்பன  போன்ற  கருத்துக்களை  முன்  வைத்தார்  தெய்வநாயகம். ஜி.யு.போப்  கூட  திருக்குறள்  கிறித்துவ  கோட்பாடுகளைத்   தழுவியது  என்றும்  குறிப்பிட்டிருக்கிறார்.  இது  சவாலுக்குறியதாக  இருந்த  போதிலும்  அதைக்  குறித்த  கருத்து  மக்கள்   மேடைக்குக்  கொண்டு  வரப்படவில்லை.  தெய்வநாயகனின்  கருத்து  கவலைக்குறியதாக  இருந்தபோதிலும்,  கலைஞர்  மு.கருணாநிதியின்  முன்னுரை  தெய்வநாயகத்தின்  நூலுக்கு மெருகூட்டியது.  திருக்குறளுக்கும்  சோதனை  காலம்  வந்துவிட்டது.

ஆக  மொத்தத்தில்  கிறித்துவ  சமய  கோட்பாடுகள்தான்  திருக்குறளுக்கு  அடிப்படை  என்ற  கருத்தை  பரப்பியதும்  கவனிக்க வேண்டிய  செய்தியாகும்.  தெய்வநாயகத்தின்  கருத்து  மற்ற  கிறித்துவ  இறைமை  வல்லுநர்களால்  நிராகரிக்கப்பட்டது.  தமிழ்  இந்துக்களும்  தெவநாயகத்தின்  கருத்துக்கு  எதிர்ப்பு  தெரிவித்தனர்.  ஆக,  பல  மதத்தினருக்கு  திருக்குறள்  சொந்தமாகும்  தரம்  உண்டு  என்றால்  மிகையாகாது.

ஒரு  காலத்தில்  பினாங்கில்  வாழ்ந்த  என்  நண்பர்  காலஞ்சென்ற ஓலிவர்  ஃபிப்ஸ் (Oliver Phipps)  ஒரு  கத்தோலிக்கர்.  நெடுங்காலம்  வழக்கறிஞராகத்  தொழில்  செய்தவர்.  பின்னர்  உயர்நீதிமன்ற  நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.  அவர்,  ஆ. அரங்கநாத  முதலியார்  ஆங்கில  மொழியாக்கம்  செய்த  திருக்குறளை  எனக்குப்  பரிசாகத்  தந்தார்.  இதில்  விசித்திரம்  என்னவெனில்  இந்த  நூலை  ஓலிவருக்குப்  பரிசாகத்  தந்தவர்  ஒரு  தமிழ்  முஸ்லிம்.  அவருடைய  கைப்பட  அழகாக  தமிழில்,  “பு.இ.மு.முகம்மது  அப்துல்லா,  பணைக்குளம்”  என்று  எழுதப்பட்டிருந்தது.  அதுமட்டுமல்ல,  இந்தத்  திருக்குறளை  மற்றுமொரு  முஸ்லிம்  நண்பரின்  கையில்  ஒரு  காலத்தில்  இருந்திருக்கிறது  என்பதற்கு   சான்றாக  “அப்துல்  கபூர்”  என்று  ஆங்கிலத்திலே  எழுதப்பட்டிருந்தது.  அரங்கநாத  முதலியாரின்  ‘திருக்குறள்’   1933ம்  ஆண்டு  அச்சிடப்பட்டதாகும்.

ஒரு  முஸ்லிம்,  திருக்குறளை  கத்தோலிக்கருக்குப்  பரிசாகக்  கொடுத்தார்  என்றால்  அந்தத்  தமிழன்பர்  திருக்குறளில்  சமயத்தைக்  காணவில்லை,  மாறாக   அதில்  புதைந்து   கிடக்கும்  கருத்துக்கள்  அவரைக்  கவர்ந்ததைத்தான்  குறிக்கிறது.  ஓலிவர்  அந்த  நூலை  என்னிடம்   கொடுத்தபோது,  “இது  ஓர்  அற்புதமான  நூல்  விவிலியத்துக்கு  (பைபிள்)  ஒப்பாக  இருக்கிறது”,  என்றார்.  திருக்குறள்  மீது  எனக்கு  இருந்த  பற்றுதலை  நான்  காட்டிக்கொள்ளவில்லை.

இவற்றை  எல்லாம்  பார்க்கும்போது  திருக்குறளை  பிற  சமயத்தினரும்  விரும்பிப்  படித்து  ஆய்வு  நடத்துவதைக்  காணமுடிகிறது.  அதிலே  சமயத்தைக்  காட்டவில்லை   திருவள்ளுவர்.  ஆனால்,  எல்லா  சமயத்தினரின்  போற்றுதலை  அது  பெற்றிருக்கிறது.

உலக  மக்கள்  பிறவிப்  பலனை  அடைய  வேண்டுமென்பதில்தான்  திருவள்ளுவர்  கவனம்  செலுத்தினாரே  அன்றி  எந்தச்  சமயத்தையும்  போற்றவுமில்லை  எந்தச்  சமயத்தோடும்  தம்மை  அடையாளம்  கண்டுகொள்ளவுமில்லை  என்பது  தெளிவாகிறது.

தமிழ்  மொழி  பேசும்  இந்துக்கள்   திருக்குறள்  இந்து  சமய  நூல்களில்  ஒன்று  எனச்  சொல்கிறார்கள்.  பிற  மொழி  இந்துக்கள்  அப்படிப்பட்ட  ஒரு  கருத்தை  ஏற்றுக்கொள்ளவுமில்லை,  திருக்குறளைப்  பற்றி  தெளிவாகத்  தெரிந்து  கொள்ளவுமில்லை.

திருக்குறள்  மனித  குலத்துக்கே  சொந்தமானது.  மனித  சமுதாயம்  அதனால்  பயனடைய  வேண்டும்.  அதற்குத்  துணை   நிற்க  வேண்டுமேயன்றி  அதைப்  பிறர்  ஒதுக்கும்படியான  நிலைக்கு   நாம்  துணைபோகக்கூடாது.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • வெற்றி தமிழன் நந்தா wrote on 1 July, 2017, 13:12

  “ஆதி பகலவன்” என்றுதான் இருந்திருக்க வேண்டும் ! சமய சாக்கடையில் மூழ்கியவன் அவர் உடலில் திருநீர் பூசினால் ! பகுத்தறிவு போதித்தவன் திருநீர் அகற்றினான் ! வந்தவன் போனவன் எல்லாம் அவன் தேவைக்கு தக்கவாறு சொரிந்துகொண்டான் ! ஐயன் வள்ளுவன் போதித்ததை இந்த குரங்கு மனம் கொண்ட மனிதனால் உணர முடியாது ! இனம், மொழி, சமயம், தேசம் அனைத்தும் துறந்தவனே அடைய முடியும் ! வள்ளுவம் போற்றி !

 • கயவன் wrote on 1 July, 2017, 17:15

  உண்மையான கருத்து  வெற்றி நந்தா அவர்களே

 • தேனீ wrote on 1 July, 2017, 19:46

  திருக்குறளின் முதல் அதிகாரத்தில் கடவுள் வாழ்த்தினை வைத்தத் திருவள்ளுவர் அதனைக் கற்க வருவோருக்குச் சொல்வது:

  “அப்பா நான் கடவுள் நம்பிக்கையுடையவன். அதனால் கடவுள் வாழ்த்தை முதலில் வைத்து எம் நூலைத் தொடங்குகின்றேன். உமக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் திருக்குறளைக் கடசற கற்று அதன்படி வாழ்’ என்றார்.

  கடவுள் நம்பிக்கையற்றோருக்கு எதற்கு திருக்குறள்?

 • தேனீ wrote on 1 July, 2017, 19:51

  திருக்குறளை ஆழ கற்று அதற்கு ஒரு கருத்துரையை வரைந்தால் கட்டுரையாளரின் கருத்துக்கு மதிப்பிருக்கும். அங்கும் இங்கும் படித்ததை ஒன்றாக இணைத்து ஒரு கட்டுரை என்று பதிவிட்டால் அதற்கு மதிப்பிருக்காது.

 • en thaai thamizh wrote on 2 July, 2017, 13:45

  தேனீ அவர்களே– தயவு செய்து சிறிது சிந்தித்து எழுதுங்கள். நல்ல கருத்து எங்கே இருந்தாலும் அதை ஏற்பதே அறிவு– கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரின் தனி உரிமை. இப்போது கடவுள் நம்பிக்கை கொண்டவன்களால் எத்தனை கொடுமைகள் நடக்கின்றன? நான் உதாரணம் காட்ட வேண்டுமா? கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இவ்வுலகில்
  பலர்–ஆனால் அவர்களில் எவ்வளவு பேர் மனிதாபிமானத்துடன் செயல் படுகின்றனர்? இன்னும் எவ்வளவோ– சிறிது சிந்தியுங்கள்.

 • தேனீ wrote on 2 July, 2017, 16:53

  “ஒரு சிலர் திருவள்ளுவரை இந்து சமயவாதியாகக் காட்ட முற்படுவதும்”

  “இந்து சமயம்” என்பதற்கு இலக்கணம் வகுத்த நூல் எது என்பதையும்; ‘இந்து மதம்’ என்று மேற்கத்தியர் அறிந்த சமயம் யாது என்பதையும்; ஏன் ஆங்கிலேயர் இந்தியாவின் மதம் ‘இந்து மதம்’ என்று பெயரிட்டு அழைத்தனர் என்பதையும் கட்டுரையாளர் புரிந்து கொண்டு கட்டுரை எழுவது நல்லது.

 • en thaai thamizh wrote on 2 July, 2017, 21:16

  திருவள்ளுவர் எந்த சமயத்தையம் சேர்ந்தவர் அல்ல.அதனால் தான் அது பொது மறையாக கொண்டாடப்படுகிறது.

 • தேனீ wrote on 2 July, 2017, 22:26

  கடவுள் நம்பிக்கை என்பது அறிவற்ற மூட நம்பிக்கையையும், கடவுளின் பெயரில் உண்மை நெறியில் நிற்காமல் அவரவர் சுயநலம் பேணி செய்யப் படும் செயலைக் கொண்டு மத நெறிகளைக் குறை சொல்வது கூடாது.

  உண்மை நெறி எது என்பவற்றை அறிந்து இறை நம்பிக்கை கொள்வதே அறிவுடைமையாகும்.

  திருவள்ளுவர் சொல்வதும் அதுவே.

 • வெற்றி தமிழன் நந்தா wrote on 2 July, 2017, 22:44

  ஆய்வாளர் கால்வெர்ட் tiga suku ஆய்வை ஆரியரும் திராவிடருமே ஏற்றுக்கொள்ளப்பட ஒன்று ! அந்த ஆய்வில் தமிழரை பின்னுக்கு தள்ளி , ஆங்கிலேயன் அரசியல் செய்தான் என்பதே உண்மை ! கால்வெர்ட் ஆய்வுக்கு முன்பே எல்லிஸ் என்ற ஆய்வாளர் தமிழரின் உண்மை வரலாறுகளை பதிவு செய்தார் ! இலுமணாட்டடிகள் அதை தடுத்து கொலையும் செய்த வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? ஐயா தேனீயும் ! அவர் விருப்பம் போன்று சொரிந்து கொண்டார் ! கட்டுரையாளரையும் குரைக்கண்டார் ! மெய்ப்பொருள் காண்பது அறிவு , ஐயன் வள்ளுவனின் வாக்கு பொய்க்காது ! வள்ளுவம் போற்றி !

 • en thaai thamizh wrote on 3 July, 2017, 19:33

  தேனீ- இறை நம்பிக்கை கொள்வதும் கொள்ளாததும் ஒருவரின் தனிப்பட்ட மனித உரிமை. தயவு செய்து உங்களுக்கு வேண்டுவதை வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு தேவையானவற்றை நான் வைத்துக்கொள்கிறேன்.

 • தேனீ wrote on 4 July, 2017, 16:52

  திருக்குறள் எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்று திராவிடச் சிந்தனையில் ஊறிய தமிழர் கூறுவதால்தான் கிறிஸ்துவுக்கு மதம் மாறிப் போன தமிழர் திருக்குறள் கிறிஸ்துவச் சிந்தனை நூல் என்று உலகம் பூராவும் தண்டோரா போட்டு வருகின்றனர். அதை மேற்கத்தியர் ஏற்கவில்லை.

  இனி திருவள்ளுவர் படத்துக்கு சிலுவையை மாட்டி இவரையும் ஒரு தூதுவாராக்கி இருக்கும் தமிழரும் மதம் மாற்றி விடுங்கள். . அப்புறம் நமக்குள் மதப் பிரச்சனையே வராது பாருங்கள்.

  திருக்குறள் மதம் சாராத நூல் என்று சொல்லத் தெரிந்த கருத்தாளர்களுக்கு அது கிறிஸ்துவ சிந்தனை உடைய நூல் அல்ல என்று சொல்லவும் துணிவு இருக்க வேண்டும். அத்தோடு நில்லாமல் அவ்வாறு சொல்வோர்களையும் தடுத்து நிறுத்த துணிவு வேண்டும்.

  அத்தகைய துணிவு இல்லாதவர் அறிவுத் தெளிவு உடைய தமிழருக்குப் பாடம் புகட்டிடாமல் இருத்தல் நல்லது. இது கட்டுரையாளருக்கும் சேர்த்து சொல்லப் பட்டது.

 • கயவன் wrote on 4 July, 2017, 19:10

  தேனி கருத்துதான் சரி என்று படுகிறது

 • en thaai thamizh wrote on 4 July, 2017, 19:27

  தேனீ- திருக்குறள் கிறிஸ்தவமதத்துடன் தொடர்பு இல்லாதது என்று சிறிது சிந்தனை உள்ள யாருக்கும் தெரியும்– இது ஒரு பிரச்னை என்று எனக்கு புரிய வில்லை– ஆனால் எந்த சிந்திக்கும் கிறிஸ்தவர்களும் திருக்குறளை ஏற்று கொள்வதில் எந்த தவறும் இல்லையே? நல்லது எங்கிருந்தாலும் ஏற்று கொள்வதில் தவறில்லையே?
  மதம் மாறுபவர்கள் சிந்திக்கும் திறன் இல்லாதவர்கள்– ஒன்று கூற விரும்புகிறேன்- என் குடும்பத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை தூர எரிந்து விட்டேன்.

 • PalanisamyT wrote on 4 July, 2017, 22:12

  தமிழையே அறையும் குறையுமாகப் படித்த கருணாநிதி தெய்வநாயகத்தின் நூலுக்கு முன்னுரை எழுதியத்தைக் குறிப்பிடுகி ன்றீர்களா? இவர் முன்னுரையெழுதும் போது இவர் கலைஞரில்லை. அண்ணாவிற்குப் பிறகு தானாகவே கலைஞரென்ற பட்டத்தை தன் மேல் சூட்டிக் கொண்டவர். அன்று இவர் அறிஞர் அண்ணா அமைச்சரவையில் வெறும் பொது மராமத்து மந்திரிதான். இவரால் திருக்குறளுக்கு மட்டுமா சோதனை? அன்றும் இன்றும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கே சோதனையாகி விட்டாரே! கருணாநிதியைப் பற்றி இன்னும் மேலும் சொல்ல வேண்டுமானால், மற்ற மதப் பெருநாட்களுக்கெல்லாம் வாழ்த்து மடல்கள் பாடுபவர்; ஆனால் தீபத் திருநாளுக்கு மட்டும் இவர் ஒன்றும் பேசமாட்டார்; வாழ்த்தும் சொல்ல மாட்டார். இதுவென்ன பகுத்தறிவுச் சிந்தனையென்று இன்னும் விளங்கவில்லை! தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள்தானே. அன்று ஹிந்துக்களையே திருடர்களென்று சொன்னவர் கருணாநிதியென்று தமிழகத்தில் பலர் அவர் மேல் குறைப் பட்டதும் உண்மை. இந்துக்களை திருடர்களென்று சொன்ன கருணாநிதி மட்டும் தான் 5 முறை முதலமைச்சராகயிருந்தக் காலங்களில் தூய்மையான ஆட்சியையாக் கொடுத்தார். இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள் போன்று இவர் மேலும் இவர்க் குடும்பத்தின் மேலும் ஊழல் குற்றச் சாட்டுக்களில்லையா?

 • அலை ஓசை wrote on 5 July, 2017, 10:43

  ஜய்யாதேனிதிருவள்ளுவர்வாழ்ந்தகாலத்தில்
  கிருஸ்து-முஸ்லிம் மாரக்கங்கள்இருந்துயிருக
  வாய்பில்லை,2000ஆண்டுகளுக்குபிறகு
  தோண்றியதேஇருமார்க்கங்கள்என்றாலும்
  தமிழ்முஸ்லீம்கள் தமிழுக்குசிறந்த பங்களிபை
  செய்துள்ளார்கள்!

 • abraham terah wrote on 5 July, 2017, 11:24

  கருணாநிதிக்கு நடிகவேள் எம்.ஆர். ராதா கலைஞர் என்னும் பட்டத்தைக் கொடுத்ததாக படித்திருக்கிறேன். எம்.ஆர். ராதா அப்படியெல்லாம் யாரிடமும் மயங்குபவர் அல்ல!

 • abraham terah wrote on 5 July, 2017, 11:49

  தேனி! உங்கள் மூலம் புதிதாக ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டேன். திருக்குறள் கிருஸ்துவ நூலாக கிருஸ்துவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதாக சொல்லுகிறீர்கள். எனக்குத் தெரிந்து அப்படியெல்லாம் ஏற்றுக் கொண்டாதாகத் தெரியவில்லை. கிருஸ்துவனுக்கு ஓரே ஒரு நூல் தான் உண்டு. அது தான் பைபிள். அது தவிர வேறு எதனையும் புதிதாக அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது. திருக்குறள் ஒரு நீதி நூல் என்பதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் அதனை முழுமையாகக் கூட அறிந்திருக்கவில்லை! காரணம் என்னால் அதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் நான் விட்டுவிட்டேன். என்னுடைய கல்வி அறிவு அவ்வளவு தான். திருக்குறள் ஒரு தமிழனால் உலகில் உள்ள அனைத்து மாந்தர்களுக்கும் எழுதப்படட ஒரு நூல். அது எழுதப்படட காலத்தில் கிருஸ்துவ மதமே இல்லை. அப்படி இருக்கும் போது ….எப்படிப்பா இப்படி எல்லாம் ………………! புரியவில்லை!

 • தேனீ wrote on 5 July, 2017, 13:35

  https://www.youtube.com/watch?v=KPrzi9EjtDc

  மேலே பதிவிடப்பட்ட ‘யூடியூப்’ ஒளிப்பேழையின் 11-வது நிமிடம் முதல் காணவும். கிறிஸ்துவத்திர்க்கு மதம் மாறிய தமிழர் சொல்வதென்ன?

  தமிழர்களை மதம் மாற்ற இப்படி பல ஒளிப்பேழைகள் ‘யுடியூப்பில்’ பதிவிடப்பட்டு உலகத் தமிழரிடையே திருக்குறளுக்குத் தப்பான விளக்கங்கள் கொடுக்கப் பட்டு திசை மாற்றப்படுகின்றனர்.

  இதுதான் மதம் மாறியோரின் அவலட்சணம். தமிழர்களுக்கு அறிவுரை கூற விழைவோர் இத்தகையோருக்கு முதலில் அறிவுரை கூறி அவர்களை தடுத்த நிறுத்த முற்படுங்கள். அவர் வாயை அடைக்க முடியாது என்றால் பிற தமிழருக்கு அறிவுரை கூற புக வேண்டாம்.

    

 • Anonymous wrote on 5 July, 2017, 15:24

  நல்ல வேலை 2G கொண்டான் இன்று பதவியில் இருந்தால் ..திருக்குறள் கூட தான் எழுதியது என்று வெட்கம் இல்லாமல் விளக்கம் அளிப்பான் …தகர தமிழ் நாட்டு(இன்ஜின் இல்லாத கார் மாதிரி) பஸ் களில் திருக்குறள் அளிக்க பட்டு …தட்ச்சணாமூர்த்தியின் தெருக்குறள் எழுதப்பட்டது சில ஆண்டுகளுக்கு முன்னர் …கழக குஞ்சுகள் குதூகலித்தது ..உண்மையில் இவன் பெயரில் வந்த புத்தகங்களை எழுதியது யார் ? 1949 வரையிலும் அழகு தமிழ் எழுதி ..பேசப்படத்தை கெடுத்து ..தமிங்கிலீஷ்  அறிமுகம் செய்த  பெருமை இந்த அரசியல் வியாதிக்கு உண்டு 

 • abraham terah wrote on 6 July, 2017, 11:54

  தேனி அவர்களே! அவர்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது! அவர்கள் ஒரு தனி உலகம். அவர்களை நம்பாதவர்களை அவர்கள் சாபம் இடுவார்கள். அவர்களை தடுத்து நிறுத்தும் அளவுக்கு எனக்குத் திருக்குறளில் எந்தப் புலமையும் இல்லை. பிற தமிழருக்கு அறிவுரை கூற வேண்டாம் என்று சொல்லுவது தவறு. அதை விட்டால் வேறு என்னத்தைக் கூறுவது? இங்கு சொல்லப்படும் அனைத்தும் அறிவுரை தானே!

 • தேனீ wrote on 6 July, 2017, 19:12

  தமிழரின் பண்பாடாக இருந்து தமிழரின் சிந்தனையில் உதித்தது முப்பாலைக் கூறும் திருக்குறள். அதனை அயலார் சிந்தனையில் உதித்தது என்று எத்தமிழரும் கூறுவாரேயானால் அவர் கோடறிக் கம்புக்கு ஒப்பாவார். அத்தகையோர் பிற தமிழருக்கு அறிவுரை கூற தகுதியற்றோர் என்பதை எடுத்துக் கூற வேண்டிய நிர்பந்ததிற்கு தமிழர் தள்ளப் பட்டுள்ளோம். இது கசந்தாலும் தக்க வைத்தியமே என்று புரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

 • mannan wrote on 7 July, 2017, 10:48

  ம்ம்ம்ம்…… திருக்குறளும் திருவள்ளுவரும் விவாத பொருளாகிவிட்டனர் இன்று.. என் சொல்வது!!!. யாவரும் ஒன்றை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் மறையான திருக்குறளை நன்கு படித்து புரிந்து தெளிந்து கருத்து கூறினால் அது நன்றாக இருக்கும். திருக்குறள் தொடங்குவதே கடவுள் வாழ்த்தை கொண்டு தான். அதில் இறைவன் என்று பொதுவாக குறிப்பிட்டு இருந்தாலும் அது ஹிந்து மத கடவுளையே போற்றி எழுதப் பட்டது என்பதை படிக்கும் போதே நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இதை புரியாமல் அறியாமல் வாதம் செய்வது வேண்டாமே. திருக்குறள் நூலை படித்திட்டு யாவரும் வாழ்வில் இன்புற்று வாழ வாழ்த்துவோம்.

 • abraham terah wrote on 8 July, 2017, 11:12

  மேலே கட்டுரையாளர் கடைசியாக என்ன சொல்லுகிறார் என்று பாருங்கள். மனித சமுதாயம் பயனடைய வேண்டும் என்பது தான் திருக்குறளின் நோக்கம். மற்றபடி திருக்குறள் இந்து சமய நூல் என்றால் வருத்தப்பட ஒன்றுமில்லை. காரணம் நாம் யாரும் திருவள்ளுவர் சொன்னதைக் கேட்டு நடக்கப் போவதில்லை!

 • s.maniam wrote on 11 July, 2017, 14:44

  எழுத்துக்கு எந்த சாயமும் பூசாதீர்கள் !! குறிப்பாக தமிழுக்கு சாயம் பூசுவதை நிறுத்துங்கள் !! வள்ளுவன் தமிழனா ! இந்துவா ! கிறிஸ்துவான ! என்ற விவாதமெல்லாம் தேவை யற்றது ! அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன் தான் , ஏசு காவியம் எழுதினார் , கண்ணதாசன் கிறிஸ்தவரா ! இளைஜர்களை பைபிள் படியுங்கள் என்றார் விவேகானந்தர் ,அவர் இந்துக்களை மதம் மாற சொன்னாரா !!கிருஸ்துவ தேவாலயங்களிலும் !! இந்திய முஸ்லீம் பள்ளிவாசல்களிலும் தமிழ் காக்க படுவதையும் ! வளர்க்க படுவதையும் பாருங்கள் !! ஆனால் இந்து கோவில்களில் தமிழ் அளிக்கப்படுவதையும் ! தமிழ் படும் அவஸ்தையை பாருங்கள் !! லோர்ட் முருக !! லோர்ட் கிருஷ்ண !! லோர்ட் சிவா !! இப்படித்தான் கோவிலில் வழிபாடுகள் நடக்கிறது !! தமிழ் கடவுள் முருகனுக்கு ஆங்கிலத்தில் வழிபாடு !!

 • அலை ஓசை wrote on 11 July, 2017, 17:40

  கண்ணதாசன் எப்போதுமேபோதையில்
  இருப்பாராமே,போதையில்சொல்வதெல்லாம்
  கணக்கில்வருமா?

 • தேனீ wrote on 11 July, 2017, 20:42

  எந்த தமிழர் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்கின்றாரோ அவரிடம் ‘இந்து’ என்பவர் யார்? என்று விளக்கம் கேளுங்கள். எந்த தமிழர் தன் சமயம் ‘இந்து’ என்று சொல்லிக் கொள்கின்றாரோ அந்த சமயத்தின் கோட்பாடு என்னவென்று என்று கேளுங்கள். எந்த தமிழர் தன்னை ‘இந்து’ என்றுசொல்லிக் கொள்கின்றாரோ அவர்தம் முதல் நூல் எதுவென்று கேளுங்கள். தங்களுக்கே இதற்கெல்லாம் பதில் தெரிந்தால் எழுதுங்கள். தெரியவில்லை என்றால் தன்னை ‘இந்து’ என்று சொல்லிக் கொள்ளாதீர். தமிழர் கோயில் வழிபாட்டை குறை சொல்வதற்கு முன் கோயில் வழிபாட்டில் தமிழில் எப்படி வழிபடுவது என்று தெரிந்து கொண்டு கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். அதுவும் தெரியவில்லை என்றால் எதற்காக கோயிலுக்குப் போகின்றீர்கள்? அது வீன் செயலே.

 • தேனீ wrote on 11 July, 2017, 20:48

  “மனித சமுதாயம் பயனடைய வேண்டும் என்பது தான் திருக்குறளின் நோக்கம்”

  அப்படியென்றால் ‘பொய் கூறாமை’ என்று திருக்குறளில் ஒர் அதிகாரம் உண்டு. அதனை அறியாமலா மதம் மாறிய தமிழர் திருக்குறள் அயலார் சிந்தனை நூல் என்று பொய்யுறைக்கின்றனர்?

  அப்படியென்றால் திருக்குறளை அறிந்தே பொய் உரைப்பவர் எத்தகைய மனித சமுதாயத்திற்கு பயனடைய உதவுவார்?

  தமிழர் மேலும் மதம் மாற உதவுவதுதான் அவர் செய்யும் சமூதாயத் தொண்டா? நல்ல வேடிக்கை! நல்ல நியாயம்!

 • தேனீ wrote on 11 July, 2017, 20:58

  “இந்திய முஸ்லீம் பள்ளிவாசல்களிலும் தமிழ் காக்க படுவதையும் ! வளர்க்க படுவதையும் பாருங்கள்”

  மதம் மாறிய தமிழர் தமிழை வளர்க்கவில்லை. அவர்தம் மத கருத்துகளை அவர் அறிந்த தொடர்பு மொழியில் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் அம்வழிபாட்டிற்கு செல்கிறார்கள். மற்றவருக்கு மலாய் மொழி தெரிந்தால் அவர் அவ்வகை வழிபாட்டுக்குச் செல்கின்றார்.

  இதில் தமிழ் மொழி வளரவில்லை. தமிழில் அவர்தம் மத கருத்துக்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அத்தோடு தமிழரின் சிந்தனைகளையும் சேர்த்துச் சொல்லி அவர்தம் மதத்திற்கு ஒரு புத்தாக்கம் கொடுக்கின்றனர். இதுதான் அவர் தமிழுக்குச் செய்யும் தொண்டா? அல்லது தமிழரை மதம் மாற்றும் தொண்டா? தமிழன் தன்னிலை அறியாமல் பேசுவதால்தான் இன்று நம் நிலை இப்படி!

 • தேனீ wrote on 11 July, 2017, 21:03

  கவிஞர் கண்ணதாசன் தாம் பல தமிழ் பாடல்களை எழுதியிருந்தாலும் ஒரே ஒரு பாட்டை முழுமையாக சமசுகிரதத்தில் எழுதி பாடியதே தமக்கு முழு மகிழ்ச்சியைத் தருவதாக சொன்னாராம். அப்படி சொன்னவர் எந்த நிலையில் இருந்து சொல்லியிருப்பார் என்று சிந்தித்துச் சொல்லுங்கள்.

 • iraama thanneermalai wrote on 12 July, 2017, 7:44

  கவியரசு கண்ணதாசனுக்கு வடமொழியான சமஸ்கிருதம் அறவே தெரியாது , அவர் வடமொழியை உப்புக்கண்டம் என குறிப்பிடுவார் .ஒரு கோடு வரைந்து அதன் கீழ் எழுத்துக்களை எழுதுவது ஆட்டு வத்தலை கயிற்றில் கட்டி தொங்கவிடுவது போல் இருக்கிறது என கூறுவார் .தமிழை எட்டாவது வரை படித்த அவருக்கு வடமொழி தெரியாது .அவரது வாயிலிருந்து ஆறாக வந்த நம் மனதில் இன்றும் நிற்கும் சொற்கள் இறைவன் அவருக்கு கொடுத்த வரம் என சொல்வார்கள் .எனவே வட மொழியில் அவர் பாடல் இயற்றினார் என்ற கூற்றில் உண்மை இல்லை .

 • abraham terah wrote on 12 July, 2017, 11:26

  தேவாலயங்களிலோ, பள்ளிவாசல்களிலோ, கோவில்களிலோ தமிழை வளர்க்கிறார்கள் என்று நான் சொல்லமாட்டேன். (மன்னிக்கவும் பள்ளிவாசல் எனக்குத் தெரியாது) இப்போது ஆங்கிலத்தில் தான் எழுதி வைத்துக் கொண்டு பெரும்பாலும் பாடுகிறார்கள்; வாசிக்கிறார்கள். தேவை தமிழனுக்கு தாய்மொழிப்பற்று.இல்லாவிட்டால் போய்விடும் தமிழ் அவனைவிட்டு!

 • s.maniam wrote on 13 July, 2017, 17:41

  பிற மதத்தினர் தமிழை வளர்க்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம் ஆனால் தமிழின் பயன் பாடு அங்கு இருக்கிறதே ! பல தமிழ் புத்தகங்களும் ! தமிழில் அறிக்கைகளும் ,அறிவிப்புகளும் வந்து கொண்டுருக்கிறது !! மாரியம்மன் கோவில் கும்பாவிசாக அறிக்கையை இந்து ஆங்கிலத்தில் அச்சடிக்கிறான் !! தமிழனிடையே தமிழின் பயன் பாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள் !! தமிழ் நாட்டில் தமிழன் பேசும் தமிழை கேட்டால் வாந்தி வருகிறது !! இங்கு உள்ள தமிழனும் மானம் இழந்து ! மொழி இழந்து வாழ தயாராகி கொண்டு இருக்கிறான் !!

 • Anonymous wrote on 13 July, 2017, 19:53

  முஸ்லிம்கள் தமிழ் வளர்ப்பில் முன்னணியில் உள்ளார்கள் என்பதை மறக்கவேண்டாம் .அன்றைய பர்மா நாட்டில் ௧௫௦ வருடங்களுக்கு முன்னரே ..பர்மா தமிழ் சங்கம் அமைத்தவர்கள் சோலிய முஸ்லிம்கள் தான் ..கூடவே ஆரம்பத்தில் பர்மா ,,மலேயா நாடுகளில் தமிழ் நாள் ஏடுகள் தொடங்கியதும் முஸ்லிம்களே …ஹாங் காங்  நகரில் முதல் தமிழ் பாடசாலைகள் தொடங்கியதும் முஸ்லிம்களே ..இலங்கையில் முஸ்லிம்கள் தாய் மொழி தமிழ் ..எங்கும் தமிழில் தான் பேசுவார்கள் ..கூடவே அரசாங்க பத்திரங்களை தமிழில் தான் நிரப்புவார்கள் ..நம்ம தகர டமில் நாட்டு மக்கள் தமிங்கிலீஷ் பேசுவார்கள் 

 • தேனீ wrote on 13 July, 2017, 20:04

  தமிழ் முசுலிம்கள் தமிழ் நாட்டிலும் சரி அங்கிருந்து வந்தோரில் பலரும் சரி தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளனர். அதை மறுக்கவில்லை. ஆனால் மலேசியாவில் அவர்தம் இளையோரிடையே இன்று இருக்கும் நிலை என்ன? நமது நாட்டின் தலைமைச் செயலாளரும் தமிழ் அறிந்தவர்தான். ஆனால் அவரின் தொழில் காரணமாகத் தமிழில் பேசமுடியவில்லை. இன்னும் உள்ள தமிழ் முசுலீம் இளைஞரோ தமிழை மறந்து மலாய் மொழியில்தான் உரையாடி வருகின்றனர். இன்னும் ஒர் இருபது ஆண்டில் அவர்தம் தமிழ் மொழி ஆளுமை குறைந்து விடும் என்பதில் ஐயமில்லை.

 • தேனீ wrote on 13 July, 2017, 20:21

  “மாரியம்மன் கோவில் கும்பாவிசாக அறிக்கையை இந்து ஆங்கிலத்தில் அச்சடிக்கிறான்”

  கோயில் பத்திரிகையில் சீன மொழியிலும் மூன்று அல்லது நான்கு வரிகளில் நம்மவர் அச்சடிப்பார் காரணம் அவனிடம் சென்று நன்கொடை வாங்க வேண்டுமே!

  ஆங்கிலத்தில் அச்சடிப்பது நம்மவரில் அனைவருமே தமிழ் படிக்கத் தெரிந்தவர் அல்லவே. இன்றே, தமிழ் கற்ற பெற்றோர் தம் பிள்ளைகளை ஆரம்ப மலாய் பள்ளிக்கு அனுப்புவதைக் காண முடிகின்றது. குறை கோயில் நிர்வாகத்தின் மீது மட்டுமில்லை. நமது அடித்தளமே ஆட்டம் கண்டு இருக்கின்றது. சீர் செய்ய வேண்டியது அடித்தளத்தில்.

  கோயில் குட நன்நீராட்டு விழா பத்திரிகை எடுத்துக் பாருங்கள். அதில் தமிழுக்குப் பதில் சமசுகிருதம் ஐம்பது விழுக்காடு இருக்கும். அதைக் கேளுங்கள். யாருக்காக
  சமசுகிருத மொழியில் அச்சடிக்கின்றார்கள்? தமிழருக்கே அப்பத்திரிக்கையில் என்ன எழுதியிருக்கின்றது என்று புரியாது. யாராவது கேட்டிருப்பாரா? தமிழ் பற்றுடையோர் தமிழர் சமயத்தை அறிந்தோர் கோயில் நிர்வாகத்தில் இருக்க விடமாட்டார். அப்புறம் தமிழர் கோயிலில் தமிழ் எங்ஙனம் வளரும்?

 • s.maniam wrote on 13 July, 2017, 20:27

  தமிழ் இந்துக்களுக்கு தான் சொந்தம் ! திருக்குறள் இந்துக்களுக்காக எழுத பட்டது என்று வாதிடும் போது ! கிறிஸ்தவனும் , முஸ்லிமும் தமிழின் ஆளுமையை இழந்து விடுவான் என்று வருத்தம் ஏன் இந்துக்களை மட்டும் தமிழ் பேச சொல்லுங்கள் ! தமிழை கற்க சொல்லுங்கள் ! சீரிய சிந்தனை இன்றி சட்டிக்குள் குதிரை ஓட்டுவதால் தான் சுதந்திரம் பெற்ற பின்னும் வெள்ளையனின் மொழியை சரளமாக எழுதுகிறோம் பேசுகிறோம் !! தமிழ் தமிழனுக்கே தடுமாறுகிறது !! அழியும் மொழிகளில் தமிழும் ஒன்று என்று படித்தது ஞாபகத்திற்கு வருகிறது !!

 • தேனீ wrote on 13 July, 2017, 20:45

  முத்தையா கண்ணதாசனாக மாறிய பிறகு அவர்தம் சிந்தனை திராவிடத்தை மட்டும் தழுவியில்லாமல் இந்து மதத்தையும் தழுவி இருந்தது.

  அவ்வாறு இருக்கும் தருணத்தில் கனகதார தோத்திரத்தை சமசுகிரத மொழியிலிருந்து மொழிபெயர்த்து தமிழில் எழுதி வெளியிட்டார். சமசுகிருத மொழியைப் பின்நாளில் கற்காமல் அவர் அத்தோத்திரத்தை மொழி பெயர்த்து எழுதியிருக்க முடியாது.

  அப்பாடலைக் கேட்டு கண்ணதாசன் அவர்கள் சென்னையில் நடைபெற்ற ஒரு மேடை நிகழ்வில் சொன்னதை அறிந்த தமிழறிஞர் கூறியதை இங்கு பகிர்ந்து கொண்டோம்.

  அவர் சொன்னது:

  ‘நான் பல தமிழ் பாடல்களை இயற்றியிருந்தாலும் சமசுகிரத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த பாடலே எமக்கு மன திருப்தியை அளித்தது”

  தமிழுக்குத் தன் உயிரை விடும் சில தமிழரும் சில வேளைகளில் சோரம் போவதைக் குறிக்கவே அதனைப் பதிவு செய்தேன்.

  நானும் கண்ணதாசன் பாடல் இரசிகன்தான்.

 • தேனீ wrote on 14 July, 2017, 9:46

  ‘இந்து’ என்றால் யார்? இதைக்கூட வரலாற்றுப் பூர்வமாக தெரிந்து வைத்துக் கொள்ளாமல்  எழுதுவதால்தான் தமிழர் குழம்பிப் போனார். ‘இந்து’ என்பது தமிழரைக் குறிக்கும் சொல் அல்ல. அது வடக்கே சிந்து நதிக்கரை பகுதியில் வாழ்ந்தோரைக் குறித்தச் சொல். ‘சிந்து’ பாராசீகம் போய் அப்புறம் கிரேக்கத்திலிருந்து ‘இந்து’ – வாக வந்த சொல்.

  திருக்குறள் தமிழர் பண்பாட்டில் திளைத்த அறநெறி என்பதோடு நில்லுங்கள். அதை பின்பற்றி வாழுங்கள். தமிழர் உருப்படுவார். அதனை உலகவாழ் மக்கள் அவர்தம் அறநெறி என்று ஏற்று வாழ்வதால் தமிழருக்கு எந்த ஒரு தடையும் இல்லை. அவ்வகையில் தமிழ் மறை பொது மறை என்பதில் எந்த ஒரு தடையும் இல்லை.         

 • அலை ஓசை wrote on 14 July, 2017, 13:25

  ஐய்யாதேனி இந்துஎன்றசொல்தமிழர்களை
  குறிப்பிடுவன அல்லஎன்றுஇதே
  செம்பருதியில்பலவாசகர்கள்கருத்துகளை
  பதிவுசெயிதிருந்தார்கள்,தாங்கள்
  இந்துக்கள்யார்என்பதற்கு ஆணிஅடித்தது
  போல்விளக்கியுள்ளீர்கள்!

 • தேனீ wrote on 14 July, 2017, 15:57

  ஒய்வு இருக்கும்பொழுது ‘இந்து’ என்பதின் பொருள் விளக்கம் என்னவென்பதை குறித்து செம்பருத்தியில் ஒரு கட்டுரையை பதிவேற்றுவோம்.  

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)