நஜிப் : அந்த இந்திய வம்சாவளி பிரதமரைவிட, நான் அதிகம் செய்திருக்கிறேன்

Slide1இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரைவிட, மலேசிய இந்தியர்கள் முன்னேற்றத்திற்கு  தாம் அதிகம் பங்காற்றியுள்ளதாக பிரதமர் நஜிப் கூறினார்.

அந்த முன்னாள் பிரதமரின் பெயரைக் குறிப்பிடாமலேயே, அவரின் சேவை காலத்தோடு, நஜிப் தம்மை ஒப்பிட்டுப் பேசினார்.

“நான் பிரதமரான பிறகு, கிட்டத்தட்ட 900 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைத் தமிழ்ப்பள்ளிகளுக்காக வழங்கியுள்ளேன் என்று டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளார்”, என ம.இ.கா. தலைவரும் சுகாதார அமைச்சருமான  டாக்டர் எஸ்.சுப்ரமணியம் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி நஜிப் பேசினார்.

“அதோடுமட்டுமின்றி, அந்த இந்திய வம்சாவளி பிரதமர் உட்பட, எனக்கு முன்னாள் இருந்த அனைத்து பிரதமர்களையும் விட, நான் அதிகம் செய்திருக்கிறேன் என்றும் டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளார்”, என 200-ஆம் ஆண்டு தமிழ்க்கல்வி கொண்டாட்ட விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் நஜிப் குறிப்பிட்டார்.

மலேசிய இந்தியர்களின் எதிர்கால மேம்பாட்டிற்குக் கல்வி இன்றியமையாத ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டுமென நஜிப் வலியுறுத்தினார்.

“முறையான கல்வியறிவு ஒருவன் தன் வாழ்க்கையில் சிறந்து விளங்க உதவுவதோடு, தன்னைச் Slide2சார்ந்தவர்களையும் முன்னேற்ற உந்துதலாக அமையும். அதனால்தான், நான் இந்திய சமூகத்தைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க ஊக்குவிக்கிறேன்”, என நஜிப் தனதுரையில் கூறினார்.

மேலும், இவ்வாண்டு அறிமுகம் கண்ட ‘மலேசிய இந்தியர் பெருந்திட்டம்’, இந்தியர்களை ஒருமுகப்படுத்தி, நாட்டின் முன்னேற்றப்பாதையில் அவர்களையும் இணைத்து செல்ல உதவும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

2009-ம் ஆண்டு தொடக்கம், தனது நிர்வாகத்தின் கீழ் இந்தியச் சமூகத்திற்கான மேம்பாட்டு திட்டங்கள் பல, தொடர் நடவடிக்கையாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் நஜிப் குறிப்பிட்டார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • Dhilip 2 wrote on 11 July, 2017, 23:52

  ‘அ’ என்றால் மா இ கா பாஷயில் அல்வா …..

 • காமராசன். wrote on 12 July, 2017, 11:07

  அண்ணே..பெரியண்ணே…எங்களை இனியும் இந்தியர்கள் என்றும் இந்திய வம்சாவளியினர் என்றும் பார்க்காதீர்கள். நாங்களும் இந்த நாட்டில் பிறந்து இந்த நாட்டுக்காக உழைத்து இங்கேயே மடியும் இனம் தான். எனவே இனியும் எங்களை இந்தியர்கள் என்று பிரித்துப் பார்க்காதீர்கள். எங்களை மலேசியர்களாகப் பாருங்கள். இந்தியாவுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனவே, மலேசியர்களுக்கு உரிய உரிமையை எங்களுக்கும் தாருங்கள்.
  ஒரு சிங்கப்பூர்க்காரன் (அவன் சீனனோ, மலய்க்காரனோ, இந்திய வம்சாவளிக்காரனோ) மலேசியா வந்தால் நான் சிங்கபூரியன் என்று தன்னை அடையாளப்படுத்துகிறான். காரணம் அவனை அந்த நாடு சிங்கபூரியன் என்று மட்டுமே பார்க்கிறது. ஆனால் நாங்கள் சிங்கைக்குப் போனால் எங்களை சீனன் என்றோ மலாய்க்காரன் என்றோ இந்திய வம்சாவளி என்றோ தான் எங்களை சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம் எங்களை நீங்கள் பிரித்துப் பார்க்கும் பழக்கத்தால் வந்த வினை அது. நீங்கள் மாற வேண்டும். நாங்கள் மலேசியர்கள்; எங்கள் பிள்ளைகள் பூமிபுத்ராக்கள்.

 • abraham terah wrote on 12 July, 2017, 11:55

  ஆகா! ஓகோ! இனி பாடப் புத்தகங்களில் மாகாதிர் இந்திய வம்சாவளி என்றும் நஜிப் இந்தோனேசிய வம்சாவளி என்றும் படிக்க வேண்டிய நிலை வரலாம்!

 • en thaai thamizh wrote on 12 July, 2017, 13:42

  கதை சொல்வதில் இந்த நாதாரிகளுக்கு அளவே இல்லை. இந்த நாதாரிகள் நமக்காக ஒன்றும் புடுங்கவில்லை. நம்மை ஓரங்காட்டுவதிலேயே முனைப்பாக செயல் பட்டனர். இந்த கதைகளை நம்பியே நம்மவர்கள் இந்த நாதாரிகளுக்கு வாக்கு போட்டு அரியணையில் அமர்த்தி நாறிப்போனார்கள்.

 • en thaai thamizh wrote on 12 July, 2017, 13:56

  நம்பிக்கை நாயகன் அல்தான் தூயா — கடல் திருட்டு பரம்பரை.

 • singam wrote on 12 July, 2017, 18:17

  இந்த ம.இ.கா.வினர் உப்பு போட்டு சோறு சாப்பிடுபவர்களாக இருந்தால், எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். இந்நாட்டில் வாழும் மலேசியத் தமிழர்களை உண்மையிலேயே நீ (நஜிப்) ஓரங்கட்டவில்லை என்றால், இந்நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பள்ளிகளையும் அரசு சார்ந்த தமிழ் பள்ளிகள் (Govt,fully aided schools ) என அறிவிக்கச்  சொல்லுங்கள். முடியுமா?

 • singam wrote on 12 July, 2017, 18:26

  MR .காமராசன் அவர்களின் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் இந்தியர்கள் அல்ல. நாம் மலேசியத் தமிழர்கள். We are Tamil speaking Malaysians .Our mother tongue isTamil. Najib is a Malay speaking Malaysian . He is not an INdonesian . 

 • Rajoo wrote on 12 July, 2017, 20:43

  முன்னாள் பிரதமரைவிட, மலேசிய இந்தியர்கள் முன்னேற்றத்திற்கு தாம் அதிகம் பங்காற்றியுள்ளதாக பிரதமர் நஜிப் கொள்ளையும் அதிகமாக அடித்தேன் என்று கூறினார்

 • s.maniam wrote on 13 July, 2017, 11:31

  தமிழ் பள்ளிகள் அரசு மானியம் பெரும் பள்ளிகளாக நமது சமூக கட்டுப்பாட்டில் l இருக்கும் வரை தான் , சுப்பிரமணியமும் ,பொன்னுசாமியும் தலைமை ஆசிரியர்களாக இருக்க முடியும் !! முழு அரசாங்க பள்ளிகளாக மாறினால் , அஹ்மதும் ! இஸ்மாயிலும் !! தலைமையாசிரியர்கள் ஆகி விடுவார்கள் பரவா இல்லையா !! பல அரசியல் சிக்கல்கள் நிறைந்த விஷயங்கள் இது !! ஒரு தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியருடன் பேசிய தகவலை சொல்கிறேன் !!தமிழ் ஒரு பாடமாக தான் இருக்கும் !! தமிழ் பள்ளி ஆசிரியர்கள் மற்ற மொழி பள்ளிகளுக்கு செல்ல தயாரக வேண்டும் !! விவரம் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் !!

 • s.maniam wrote on 13 July, 2017, 11:47

  இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் 22 ஆண்டுகள் நாட்டு பிரதமராக இருந்தது இந்தியர் அனைவர்க்கும் பெருமை தானே !! மலாய் சமுதாயத்தையே முட்டாளாக்கி வைத்திருந்தாரே!! உண்மையில் அவர் ஒரு மகா தீரர்தான் !! அனால் இன துரோகியாக தான் இருந்தார் என்பது கசப்பான உண்மை !! அவருக்கு கேக் ஊட்டி உறவு கொண்ட நம்மளவனும் அடி வருடியாக தான் இருந்தான் !! நமது சமுதாயத்திற்காக எதையும் கேட்க வில்லை என்று தேர்தலில் மண்ணை கௌவ வைத்தாரே தானை தலைவனை அதுவும் அவரின் சாதனை !! எந்த துணை பிரதமரையும் தனது இடத்திற்கு வர விடாமலும் இன்றும் அவர்களை நொண்டி கொண்டிருப்பதும் !! நம்மவனின் புத்தியின் வெளிப்பாடு தானே !! தானும் படுக்க மாட்டான் , தள்ளியும் படுக்க மாட்டான் !!

 • s.maniam wrote on 13 July, 2017, 11:58

  நாமெல்லாம் இந்தியனாக தான் இருக்க வேண்டும் !! மலேசிய இந்தியனாக இருப்போம் !! அணைத்து உரிமைகளையும் பெற்று உயர்த்த நிலையில் ,கல்விலும் ,பொருளாதாரத்திலும் , நல்ல சீரிய பண்புகளோடு !! நாகரிக சமுதாயமாக ! வாழ்ந்தால் இந்தியனை போல் வாழ வேண்டும் என்று மற்றவர் போற்றும் புகழோடு வாழ வேண்டும் .

 • Anonymous wrote on 13 July, 2017, 14:06

  முதலில் இந்தியன் என்ற வார்த்தை நீக்குங்கள் …தமிழன் என்று சொல்லுங்கள் .தமிழன் ..கடாரம் வென்றபோது இந்தியா என்ற நிலப்பரப்பு இருக்கவில்லை ..நிர்வாக வசதிக்காக பல இனங்களை பிரிட்டிஷ் அரசு ஒன்று சேர்த்து இந்தியா என்ற ஒரு நிலப்பரப்பை உண்டாக்கினார்கள் ..பிஜி நாட்டில் இந்தி பேசும் இந்திய வம்சாவளியினர் பாதிக்க பட்டபோது இந்தியா தனது தூதரகத்தை மூடியது …ஐநா வரை விடயத்தை கொண்டு போனது .பர்மாவில் நூறு வருந்திங்களுக் மேல் வாழ்ந்த தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டபோது கப்பல்களை அனுப்பி ஏற்றுக்கொண்டது ..போகட்டும் மலேசியாவில் இந்து கோயில்கள் உடைக்க படும்போது இந்திய அரசோ ..அங்குள்ள இந்து இயக்கங்களோ என் மூச்சு கூட விடுவதில்லை ?

 • A.Mohanasundaram wrote on 24 July, 2017, 23:31

  வணக்கம் …..நம்மவர்களை வைத்துதான் இந்நாட்டு அரசியல் நடத்துகிறது …..ஒருமுறை ஒட்டுமொத்தம் இந்தியர்கள் பொதுதேர்தலை எதிர்த்தளிப்போதும்…அரசாங்கம் நாம் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய வாய்ப்புகள் உண்டாகும் ……நம்மவர்கள்கு சம உரிமைகள் கிடைக்கவெண்டும்….அடுத்ததலைமுறைக்காக நாம் இப்பொலுதேய் பாடு பட வேண்டும் …..தமிழன் என்று சொல்லடா ….நீ தலை நிமிர்த்து நில்லடா ……நன்றி

 • iraama thanneermalai wrote on 25 July, 2017, 7:52

  இது ஒரு தேர்தல் நாடகம் .அரசியல் ரீதியாக நாம் இனி முன்னேறும் வாய்ப்புக்கள் மிகக்குறைவு .அரசியல் சார்பற்ற நம்மவர் ஒவ்வொருவரும் பங்குபெற்று சமுதாயத்தை தூக்கிவிடும் எண்ணங்களிலும் செயல்களிலும் ஈடு படும்போது விடிவு ஏற்பட வழி உண்டு.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)