மதம் மாறுவோருக்கு ஜாக்கிம் உதவிச் சம்பளத் திட்டம்

jakim மலேசிய   இஸ்லாமிய   மேம்பாட்டுத்   துறை (ஜாக்கிம்),   முஸ்லிம்களாக   மதம்   மாறியவர்கள்   கல்வியைத்    தொடர்வதற்கு   பெர்லிஸ்  இஸ்லாமிய   சமய,  மலாய்   பழக்கவழக்க  மன்றம் (மைப்ஸ்)  அளிக்கும்    உதவிகளை   மேலும்   விரிவுபடுத்த   விரும்புகிறது.

ஜாக்கிம்   தலைமை    இயக்குனர்    ஒத்மான்   முஸ்தபா,     மதம்  மாறியவர்கள்   கல்வியைத்   தொடர    உதவும்   மைப்ஸின்   மேலான   முயற்சிகளை   மற்ற   மாநிலங்களும்   பின்பற்ற    வேண்டும்   என்றார்.

“இதுவரை   எந்த   நிறுவனமும்   மதம்  மாறியவர்களுக்கு    இதுபோல்   உதவிச்   சம்பளம்   வழங்க    முன்வந்ததில்லை.  எனவே,  ஜாக்கிம்   இந்த      உதவிச்   சம்பளத்   திட்டத்தை   மேலும்   விரிவுபடுத்தும்”,  என  நேற்றிரவு   கங்காரில்   மதம்   மாறியவர்கள்   கலந்துகொண்ட   ஒரு   கூட்டத்தில்    அவர்   தெரிவித்தார்.