ஃபெல்டா லண்டனில் ஹாட்டல் வாங்கியது தொடர்பில் எம்ஏசிசி அதிரடிச் சோதனை

feldaமலேசிய    ஊழல்தடுப்பு   ஆணையத்தைச்   சேர்ந்த   சுமார்     எட்டு   அதிகாரிகள்      அதிரடிச்  சோதனை   நடத்துவதற்காக  இன்று  காலை  மணி   10.20  அளவில்     கோலாலும்பூர்,  ஜாலான்   கர்னியில்    உள்ள   ஃபெல்டா  அலுவலகத்தில்  வந்திறங்கினார்கள்.

அவர்கள்,   ஃபெல்டா   இன்வெஸ்ட்மெண்ட்    கார்ப்பரேசன் (எப்ஐசி)   லண்டனில்  கென்சிங்டனில்   நான்கு-நட்சத்திர    தங்குவிடுதி   வாங்கியது   தொடர்பில்   விசாரணை   நடத்துவதற்காக   வந்தார்கள்    எனத்   தெரிகிறது.

அக்கொள்முதல்   தொடர்பில்   புதிய   தகவல்கள்   கிடைத்திருப்பதால்    அதன்மீது   புது  விசாரணையைத்    தொடங்கும்படி    எம்ஏசிசி   தலைவர்   சுல்கிப்ளி   அஹ்மட்    கடந்த   வாரம்    உத்தரவிட்டிருந்தார்.

இதற்குமுன்    எம்ஏசிசி,   அக்கொள்முதல்  விவகாரத்தில்   எப்ஐசி   தவறு    எதுவும்   இழைக்கவில்லை    என்று   கூறியிருந்தது   என்பது   குறிப்பிடத்தக்கது.