அம்னோ இளைஞர் பதவிக்குக் குறி வைக்கிறார் ஜமால்

jamalசுங்கை    புசார்    அம்னோ    தலைவர்     ஜமால்    முகம்மட்   யூனுஸ்,   அடுத்த  பொதுத்  தேர்தலுக்குப்   பின்னர்      அம்னோ  இளைஞர்   தலைவர்   பதவிக்குப்    போட்டியிடும்   விருப்பத்தை   வெளிப்படுத்தியுள்ளார்.

எதையும்    துணிந்து    சொல்லும்    செய்யும்      அரசியல்வாதியான     அவர்,   பொதுத்  தேர்தலில்    தனக்கு  போட்டியிட    இடம்  கிடைக்காது  போனால்   அதுதான்  நடக்கும்   என்றார் .

“மாண்புமிகு   புடிமான்( முகம்மட்  ஸோதி)   சுங்கை    புசார்     நாடாளுமன்றத்    தொகுதியிலும் ,   டத்தோ   இம்ரான்  (தம்ரின்)   சுங்கை   பாஞ்சாங்   சட்டமன்றத்   தொகுதியிலும்,    ச்சேகு   சமட் (வகாப்)   செகிஞ்சான்   சட்டமன்றத்  தொகுதியிலும்  களமிறங்கினால்     சுங்கை    புசார்   அம்னோ   தொகுதித்    தலைவர்   எங்குப்   போவார்?

“சுங்கை   புசாரில்    (போட்டியிட)  இடமில்லை  என்றால்  தொகுதித்   தலைவர் (ஜமால்)   அம்னோ  இளைஞர்   தலைவர்   பதவிக்குப்   போட்டியிடுவார்”,  என்றவர்   சொன்னதாக   சினார்   ஹரியான்  கூறியது.