விதைகள் இல்லாத பழங்கள்: ஆரோக்கியமா? ஆபத்தா?

திராட்சை, பப்பாளி, தர்பூசணி போன்ற பல பழங்கள் அனைத்திலுமே விதைகள் இல்லாமல் இன்றைய சந்தைகளில் நாம் பார்க்கலாம்.

அவ்வாறு விற்கப்படும் பழங்களை நாம் சாப்பிட்டால், அது நம் உடலுக்கு ஆரோக்கியமா என்பது உங்களுக்கு தெரியுமா?

விதை இல்லாத பழங்களை சாப்பிடலாமா?

ஒட்டுரக விதைகளால் விளைவிக்கப்படும் விதையில்லா பழங்களின் மூலம் அதிக லாபம் ஈட்டலாம். அதிக அளவில் பழங்களை உற்பத்தியும் செய்யலாம்.

ஆனால், இந்த விதையில்லா பழங்களை விளைவிக்கும் தொழில்நுட்பம் இயற்கையின் சமச்சீர் நிலையைக் குறைக்கிறது. இதனால் சமச்சீரற்ற நிலை உருவாகி, நோய்களின் தாக்குதல் அதிகமாகிறது.

ஒவ்வொரு பழங்களிலும் உள்ள விதைகள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளதுடன், விதைகளுக்கு ஒரு தாவரத்தை உருவாக்க கூடிய தன்மை மற்றும் தானாக மகரந்தச் சேர்க்கைக்கு உட்பட்டுக் கனியாகும் தன்மை ஆகிய சிறப்புகள் உள்ளது.

எனவே செயற்கை முறையை விட இயற்கையான முறையில் விளைந்த விதைகளை உடைய பழங்களை சாப்பிட்டால் தான் நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

விதையில்லாத பழங்களை எப்படி தயாரிக்கிறார்கள்?

விதையில்லாமல் திராட்சை, பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் சந்தைகளில் விற்கப்படுகிறது. வீரிய ரக விதைகளைக் கொண்டு விளைவிக்கப்படும் இந்த பழங்களில் ஆக்சின்(auxin) என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது.

இந்த முறைக்கு பார்த்தினோ கார்பிக் என்று பெயர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம், பழங்களில் விதை உருவாவதைத் தடுத்து, சதைப்பகுதியை அதிகமாக்கப்படுகிறது.

இந்த விதையில்லா பழங்களில் சேர்க்கப்பட்டுள்ள ரசாயனங்கள், பழங்களை சீக்கிரம் கெட்டுப் போக விடாது. ஆனால் இப்பழங்கள் நம் உடலுக்கு எந்த விதமான சத்துகளையும் கொடுக்காது.

விதையில்லா பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்?
  • விதையில்லா பழங்களை உட்கொள்வதால், புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், தொற்று நோய்களின் பாதிப்பு ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • விதையில்லா பழங்களில் சேர்க்கப்பட்டுள்ள ரசாயனங்களினால், சிலருக்கு அலர்ஜி மற்றும் ஜீன்களில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
  • -lankasri.com