மகாதிர்: ஹரப்பானில் நான்தான் வெற்றி வீரன்

 

MTopdogமகாதிர் முகம்மட் தாம் பாக்கத்தான் ஹரப்பானில் பிரதமர் நஜிப்புக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் சமமானவர் என்று நம்புகிறார்.

‘நான் ஹரப்பான் தலைவர்களில் ஒருவர். அவைத் தலைவர் என்ற முறையில் நான் தலைமைத்துவ மன்றத்துக்கு தலைமை ஏற்பேன்.

“ஹரப்பானின் தரவரிசைச்யில், நான்தான் வெற்றி வீரன்”, என்று மகாதிர் புத்ராஜெயவில் இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கடந்த வாரம், மகாதிர் ஹரப்பானின் அவைத் தலைவர் என்றும், அன்வர் இப்ராகிம் நடப்பில் தலைவர் மற்றும் வான் அசிஸா வான் இஸ்மாயில் தலைவர் என்றும் அறிவிக்கப்பட்டது.

அம்மூன்று தலைவர்களிடையே சமமான அதிகாரப் பகிர்வு இல்லை என்பது அவரது கருத்தா என்று கேட்டதற்கு, நாட்டில் மூன்று பிரதமர்கள் இருக்க முடியாது என்றார்.

மூன்று பிரதமர்கள் இருக்க முடியுமானால், மூன்று தலைவர்கள் இருக்கலாம். தற்போதைக்கு, அரசமைப்புச் சட்டம் ஒரு பிரதமர்தான் இருக்கலாம் என்று கூறுகிறது.

“ஆகவே, கட்சிகளை வழிநடத்துவதற்கு முறையே ஒரு தலைவர் தேவைப்படுகிறார்”, என்று மகாதிர் கூறினார்.

எனினும், இது ஒரு வாய்வீச்சுதான். அது தாம் ஒரு பிரதமர் வேட்பாளர் என்று பொருள்படாது என்று அவர் மேலும் கூறினார்.