கிளந்தானில் பொது இடத்தில் பிரம்படித் தண்டனை கொடுப்பதை அரசாங்கம் தடுக்க வேண்டும்

razaliகிளந்தான்     அரசு   ஷியாரியா   குற்றங்களுக்குப்   பொது   இடத்தில்   பிரம்படித்  தண்டனை    கொடுப்பதைக்   கூட்டரசு   அரசாங்கம்   தடுத்து   நிறுத்த    வேண்டும்    என்று   மனித   உரிமை    ஆணையம் (சுஹாகாம்)    கேட்டுக்கொண்டுள்ளது.
சுஹாகாம்    தலைவர்    ரசாலி   இஸ்மாயில்,  “நாடு  முழுக்க   மனித   உரிமைகள்    மதிக்கப்படுவதை”   அரசாங்கம்    உறுதிப்படுத்த   வேண்டும்”    என்றார்.

பிரம்படி  “கொடூரமான,  மனிதாபிமானமற்ற”   தண்டனை.  அது  மலேசியா  கையொப்பமிட்டுள்ள   மனித   உரிமை   ஒப்பந்தங்களை   மீறுகிறது    என்றாரவர்.