தமிழர் தீர்வில் மந்தநிலை: வெற்றி என கூற முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறது அரசாங்கம்

rajithaதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் மந்த நிலையிலேயே உள்ளது என்பதை அரசாங்கம் ஏற்று கொள்வதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காணாமற்போனோர் விடயம் தொடர்பில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. அரசியல் கைதிகளின் பிரச்சினைக்ளுக்கு தீர்வு காணப்படவில்லை.

தமிழ் மக்களின் காணிகளின் உரிமை தொடர்பில் முடிவு காணப்படவில்லை. இவ்வாறான அடிப்படை விடயங்கள் தொடர்பான முடிவுகள் இல்லாத நிலையில், அனைத்தும் வெற்றியளித்து விட்டதாக எம்மால் கூற முடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் எதைச் செய்தாலும், உள்நாட்டுக்குள் ஏனைய சக்திகளின் விடயங்கள் குறித்தும் சமநிலைத் தன்மையை பேண வேண்டும்.

அத்துடன், சர்வதேசத்தினருடனும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளர்.

 -tamilwin.com
TAGS: