ஃபினா உலகப் போட்டியில் தங்கம் வென்று சாதனை செய்தார் ஜுன் ஹூங்

junஹாங்கேரி,   புடாபெஸ்டில்   நடைபெறும்   அனைத்துலக   நீச்சல்   சங்கங்களின்   கூட்டமைப்பு    நடத்தும்   உலகப்    போட்டியில்    நீரில்   பாயும்  ( dive)  பிரிவில்  மலேசியா    முதன்முறையாக  தங்கம்   வென்று  வரலாறு   படைத்துள்ளது.   மலேசியாவுக்கு   இந்த  வெற்றியைப்   பெற்றுத்   தந்தவர்   சியோங்   ஜுன்  ஹூங்.

பேராக்கைச்   சேர்ந்த   27-வயது   விளையாட்டு    வீராங்கனையான   ஜுன்  ஹூங்,   2016   ரியோ   ஒலிம்பிக்   போட்டியில்   பெண்டெலேலா  ரினோங்குடன்   சேர்ந்து  கலந்துகொண்ட    ஒரு   போட்டியில்   வெள்ளிப்   பதக்கம்    பெற்றவர்    என்பது    குறிப்பிடத்தக்கது.

397.50 புள்ளிகள்   பெற்று   ஜுன்  ஹூங்   தங்கம்    வென்றார்.  இப்பிரிவில்    முன்னாள்   உலக   செம்பியனான    சீனாவின்   சி   யாஜி   396.00  புள்ளிகள்   பெற்று   வெள்ளிப்   பதக்கம்   பெற்றார்.

இதனிடையே,  பெண்டெலேலாவால்   9-வது   இடத்தைத்தான்   பெற   முடிந்தது.