குவான் எங்: டிஏபி-யைச் சந்திக்க ஆர்ஓஎஸ் பயப்படுவது ஏன்?

limகட்சித்   தேர்தலை   மீண்டும்   நடத்த  வேண்டும்    என்ற    உத்தரவு    பற்றிப்  பேசலாம்    என்றால்    சங்கப்   பதிவகம் (ஆர்ஓஎஸ்)  டிஏபி    தலைவர்களைச்    சந்திக்க   பயப்படுகிறதே    என்று    டிஏபி    தலைமைச்    செயலாளர்    லிம்  குவான்    எங்   அங்கலாய்த்துக்  கொண்டார்.

ஆர்ஓஎஸ்ஸைச்   சந்திக்க    அனுமதி  கேட்டு   டிஏபி    எழுதிய   கடிதத்துக்கு    இன்னும்   பதிலில்லை    என்று   பினாங்கு    முதலமைச்சருமான    லிம்   கூறினார்.

2013  மத்திய   செயலவைக்கு    மீண்டும்    தேர்தல்    நடத்த    வேண்டும்    என்று    ஜூலை   17-இல்   டிஏபி   உத்தரவிட்டு   கடிதம்    எழுதியது   ஆர்ஓஎஸ்.  அந்த   உத்தரவுக்கு   டிஏபி  பதிலளிக்க  14நாள்  அவகாசம்   அளிக்கப்பட்டிருந்தது.   அதில்    இன்னும்   11  நாள்கள்தான்   எஞ்சியுள்ளன.  அதற்கிடையில்   ஆர்ஓஎஸ்-ஸைச்  சந்திக்க   விரும்புகிறது   டிஏபி.

“எதற்காக    எங்களைச்    சந்திக்க    அஞ்சுகிறீர்கள்?  எதை   நினைத்து    ஆர்ஓஎஸ்  பயப்படுகிறது?”,   என்று   லிம்   வினவினார்.

“நீங்கள்   சாதாரண   ஒரு   தலைவரைச்  சந்திக்கப்  போவதில்லை.  ஒரு   எம்பி-யை,  ஒரு  முதலமைச்சரைச்    சந்திக்கப்    போகிறீர்கள்.  ஒரு   சிஎம்-மைச்   சந்திக்க   ஏன்  பயம்?”,  என  இன்று  கொம்டாரில்   செய்தியாளர்   கூட்டமொன்றில்   லிம்   கேள்வி   எழுப்பினார்.