விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி! தயார் நிலையில் இலங்கை இராணுவம்! அமெரிக்கா தகவல்

ltteமீண்டும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அதனை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

புலிகளின் மீள் எழுச்சி தொடர்பில் இலங்கை இராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க பயங்கரவாத அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் செயற்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் அல்லது அதில் இணைவதற்கு தயார்படுத்தப்பட்டு வருபவர்கள் தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்கா பயங்கரவாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வருடாந்த பயங்கரவாத அறிக்கையில், கிட்டத்தட்ட 36 இலங்கையர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக சிரியாவுக்கு சென்றுள்ளதாக அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.

எனினும் ஐ.எஸ் மற்றும் வேறு பயங்கரவாத குழுக்களின் செயற்பாடு இலங்கையில் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் அமெரிக்காவுடனான பயிற்சி 2016ம் ஆண்டில் வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவு தொடர்ந்தும் நீடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட தூர கடற்படை ரோந்து திறன்களை கொண்ட அமெரிக்க P-8 கடற்படை ரோந்து விமானம் இலங்கைக்கு செல்லவுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச கப்பல் பாதைகளை பாதுகாப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க பயங்கரவாத அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

-tamilwin.com

TAGS: