பின்லேடனை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டேன்: சுட்டு கொன்ற வீரரின் முதல் பேட்டி

பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தன்னால் சுடப்பட்ட மூன்று குண்டுகளால் தான் உயிரிழந்ததாக அமெரிக்கா கடற்படையின் அதிகாரி ராபர்ட் ஓ நீல் கூறியுள்ளார்.

அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கடந்த 2011 மே மாதம் 2ஆம் திகதி அமெரிக்கா கடற்படையினர் சுட்டு கொன்றனர்.

பின்லேடனை சுட்டது யார் மற்றும் அவர் மீது எத்தனை குண்டுகள் பாய்ந்தது என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

 

இந்நிலையில், அமெரிக்க கடற்படையின் சிறப்பு நடவடிக்கைகள் படை அதிகாரி ராபர்ட் ஓ நீல் எழுதியுள்ள புத்தகத்தில், தன்னால் சுடப்பட்ட மூன்று குண்டுகளால் தான் ஒசாமா பின்லேடன் உயிரிழந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து ராபர்ட் சிறப்பு பேட்டியை அளித்துள்ளார். அவர் கூறுகையில், பின்லேடனை கொல்லும் திட்டத்துக்காக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

இந்த யுத்தத்தில், நாடு திரும்புவோமா இல்லை சிக்குவோமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால், வீரர்களாகிய நாங்கள் எதற்கும் தயாராகவே இருந்தோம்.

இந்த ஆப்ரேஷனுக்காக இரண்டு ஹெலிகாப்டரில் கிளம்பினோம். முக்கிய நடவடிக்கையில் இருந்தவர்கள் ஒரு ஹெலிகாப்டரிலும், பயணத்தின் போது தேவைப்படும் எரிபொருளைக் கொண்டு வர மற்றொரு ஹெலிக்காப்டர் என நியமிக்கப்பட்டிருந்த்து.

பின்லேடன் இருக்கும் இடத்துக்கு சென்றவுடன் அங்கிருந்த கதவுகளை வெடிகுண்டால் தகர்க்க முயன்றோம்.

அது போலியான கதவாக இருந்த நிலையில், மற்றொரு கதவை தகர்க்க நினைத்தபோது, அதை திறக்கும்படி உத்தரவு வந்தது. உத்தரவை செயல்படுத்தி உள்ளே சென்றோம், ஒசாமாவை பார்த்துவிட்டோம்.

எங்கள் குழுவினர் உள்ளே வருவதை ஒசாமா பின்லேடன் பார்த்தார். அந்த சமயத்தில் நாங்கள் கொல்லப்படும் வாய்ப்பும் இருந்தது.

என்னுடன் இருந்த பல கமாண்டோக்கள் இடப்புறமும், வலப்புறமும் பாதையை ஏற்படுத்திக் கொண்டே சென்றார்கள். எனக்கு முன் ஒரு காமாண்டோ சென்றார்,

அங்கு சிலர் இருந்தனர். முன்புறம் இருந்த திரையை அகற்றியதும், இடுப்பில் கைவைத்தபடி பின்லேடன் நின்றுக்கொண்டிருந்தார்.

 

பின்லேடனை முதலில் நான் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டேன். முன்புறத்தில் அவரது மனைவியும், எனக்கு இடப்புறத்தில் பின்லேடனின் மகனும் நின்றார்கள். இருவரையும் படுக்கையில் தள்ளிவிட்டேன்

அங்கிருந்த ஹார்ட் டிரைவ் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களை சேகரித்தோம். என்னுடன் வேறு மூன்று பேரும் அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்தோம்.

ஒசாமா பின்லேடனை சுட்டது யார் என்று அவரும், மற்றவர்களும் என்னிடம் கேட்டார்கள். என்னுடைய குண்டுகளுக்கு தான் பின்லேடன் பலியானார் என்று சொன்னேன்.

பிறகு ஹெலிகாப்டரில் பின்லேடனின் சடலத்தை வைத்தோம்.

பிறகு 90 நிமிடங்களில் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் வந்தடைந்தோம் என ராபர்ட் கூறியுள்ளார்.

-lankasri.com