டிஏபி விருப்பமின்றியே மறுதேர்தலுக்குத் தயாராகிறது

dapஆர்ஓஎஸ்    உத்தரவை   எதிர்த்தாலும்    டிஏபி   அதன்   செயலவை(சிஇசி)க்கு   மறுதேர்தல்    நடத்தத்    தயாராகி   வருகிறது.

“14வது   பொதுத்   தேர்தல்    எந்த   நேரத்திலும்   நடத்தப்படலாம்   என்றிருக்கும்   வேளையில்   இந்த  (ஆர்ஓஎஸ்)  உத்தரவு   வந்துள்ளதைக்  கருத்தில்   கொண்டு    டிஏபி  விருப்பமில்லாமலேயே   அதன்  சிஇசிக்கு மறுதேர்தல்     நடத்த    ஆயத்தமாகவுள்ளது.  அதேவேளை   சட்ட   நடவடிக்கை   எடுக்கும்   எங்களின்   உரிமைகளையும்   விட்டுக்கொடுக்க    மாட்டோம்”,  என   டிஏபி   உதவித்   தலைவர்  தெரேசா   கொக்   கூறினார்.

அவர்  இன்று   புத்ரா  ஜெயாவில்   ஆர்ஓஎஸ்   தலைமையகத்தில்  ஆர்ஓஎஸ்ஸிடம்   டிஏபி   கொடுத்த   கடிதத்தின்    உள்ளடக்கத்தை   வாசித்துக்   காட்டினார்.

மறுதேர்தல்    நடத்த   உத்தரவிட்டு   ஆர்ஓஎஸ்   ஜூலை   17-இல்   அனுப்பிய   கடிதத்துக்குப்   பதிலளிக்கும்     விதமாக   டிஏபி   அக்கடிதத்தைக்  கொடுத்தது.

ஆர்ஓஎஸ்  அதிகாரி   முகம்மட்   நவாவி   மாட்   அக்கடிதத்தைப்   பெற்றுக்கொண்டார்.