அன்னிய தொழிலாளர்கள் விவகாரத்தின் ஊழல்களை அம்பலப்படுத்தும் அல் ஜசீரா நிகழ்ச்சிக்கு நூர் ஜஸ்லான் கண்டனம்

உள்al jazeeraதுறை   துணை    அமைச்சர்   நூர்  ஜஸ்லான்   முகம்மட்   மலேசியாவில்   அன்னிய   தொழிலாளர்களைக்    கொண்டுவரும்    தொழிலில்    வெளியில்   தெரியாமால்    உள்ளுக்குள்   நடக்கும்   பணப்  பட்டுவாடாக்களை    வெளிச்சம்போட்டுக்   காட்டும்    அல்  ஜசீரா   தொலைக்காட்சி   நிகழ்ச்சிக்குக்   கண்டனம்    தெரிவித்துள்ளார்.

அல்  ஜசீராவின் 101 East    நிகழ்ச்சியில்   “Malaysia’s Migrant Money Trail”  என்ற   தலைப்பில்   அந்நிகழ்ச்சி   ஒளியேறியது.

அந்நிகழ்ச்சியில்  முகவர்கள்   சிலர்,   அன்னிய    தொழிலாளர்களை     நாட்டுக்குள்   கொண்டுவர     உள்துறை   அமைச்சிலும்   குடிநுழைவுத்துறையிலும்   உயர்நிலை   அதிகாரிகள்  உள்பட ,  பலருக்கு     அடிக்கடி    பணம்   கொடுத்து   வருவதாக    ஒப்புக்கொண்டார்கள்.

“இவை  காலங்கடந்த    குற்றச்சாட்டுகள்.  உள்துறை   அமைச்ச்சிலும்   குடிநுழைவுத்துறையிலும்    முகவர்களின்     நடவடிக்கைகளைத்    தடுத்து  நிறுத்த   நடவடிக்கை    எடுத்துள்ளோம்.  2017  ஏப்ரலிலிருந்து  மிகவும்  வெளிப்படையான   இணையவழி   விண்ணப்பம்    செய்வதை   அமல்படுத்தி    வருகிறோம்.

“அதனால்   அல்  ஜசீரா   நிகழ்ச்சியில்    சொல்லப்படும்    குற்றச்சாட்டுகள்   காலங்கடந்தவை”   என்று  மலேசியாகினி   தொடர்புகொண்டபோது   நூர்  ஜஸ்லான்   கூறினார்.