ரவுஸ், சுகிப்ளி பதவி நீட்டிப்பில் அரசாங்கம் சலுகை காட்டுவது தெளிவாகவே தெரிகிறது – மகாதிர்

dr mஉயர்  நீதிபதிகள்   இருவரின்   பதவிக்காலம்   “வழக்கத்துக்குமாறாக”      நீட்டிக்கப்பட்டிருப்பது  நீதித்துறைமீதுள்ள   நம்பிக்கையைக்  குலைத்து  விடும்    என்று   முன்னாள்   பிரதமர்  டாக்டர்   மகாதிர்   முகம்மட்    கூறுகிறார்.

“அவர்களின்   பதவிக்குப்   பொருத்தமான    ஆள்கள்   இல்லாமலில்லை.

“இங்கு   அரசாங்கம்    சிறப்புச்    சலுகை    காட்டுவது    தெளிவாகவே     தெரிகிறது”,  என   தலைமை  நீதிபதி   முகம்மட்    ரவுஸ்   ஷரிப்பும்  முறையீட்டு   நீதிமன்ற    நீதிபதி   சுல்கிப்ளி   அஹமட்   மகினுடின்   கூடுதல்    நீதிபதிகளாக   நியமிக்கப்பட்டிருப்பது    குறித்து    மகாதிர்   கருத்துரைத்தார்.

பலரும்   அது   அரசமைப்புக்குப்  புறம்பான   நியமனம்     என்று   குறைகூறினர்.  ஆனால்,   அரசாங்கம்    எல்லாம்   முறைப்படிதான்    செய்யப்பட்டுள்ளது    என்று  வாதாடுகிறது.

பணி  ஒய்வுபெற்ற     கூட்டரசு   நீதிபதி    கோபால்   ஸ்ரீராம்,   தலைமை   நீதிபதி    பதவியை    ஏற்பதற்கு   வேறு   நீதிபதிகள்   இருக்கவே   செய்கின்றனர்    என்கிறார்.    மலாயா     தலைமை     நீதிபதி    அஹமட்   மா‘ரோப்,   சாபா ,  சரவாக்    தலைமை   நீதிபதி   ரிச்சர்ட்    மலாஞ்சும்,   கூட்டரசு    நீதிமன்ற    நீதிபதி    ஹசான்  லா    ஆகியோருக்கு  அத்தகுதி   உண்டு    என்றாரவர்.

தம்   வலைப்பதிவில்    நீதிபதிகள்    நியமனம்   குறித்து    எழுதிய    மகாதிர்,   சலுகை   பெற்ற    நீதிபதி    ஒருவர்   அளிக்கும்    தீர்ப்பைப்  “பாரபட்சமற்ற”   தீர்ப்பு    என்று   ஏற்பதற்கு  இயலாது    என்றார்.