சசிகலா இனி தப்பிக்கவே முடியாது: அடித்துச் சொல்லும் டி.ஐ.ஜி ரூபா

roopaபெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறியது உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறி உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.ஐ.பி-களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக ரூபா ஐ.பி.எஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

சசிகலாவின் அறையில் சமையலறை, குளிர்சாதனப் பொருள்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்காக, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ரூபா தெரிவித்தார்.

இந்த விவகாரம் கர்நாடக அரசியலிலும் ஐ.பி.எஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரூபா, சசிகலாவுக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறையில் விதிமுறைகளை மீறியது குறித்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

-lankasri.com

TAGS: