மற்றவர்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்துவதைத் தவிர்க்க உலக முஸ்லிம்கள் ஒன்றுபட கூவுகிறார் ஹாடி அவாங்

 

yrsayHadicantஇஸ்லாம் மற்றவர்களால் இழிவுபடுத்தப்படுவதைத் தவிர்க்க உலக முஸ்லிம்கள் ஒன்றுபடுமாறு உலக உலாமா மன்றத்தின் உதவித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இப்போது முஸ்லிம்கள் உலக முழுவதும், குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் இதர மேற்கு ஆசிய நாடுகளில், கொல்லப்படுகிறார்கள். முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், இஸ்லாம் வலுவாக இருக்கும் என்று உம்மா ஒற்றுமை மீதான நான்காவது ஆசிய அனைத்துலக கூட்டத்தின் விருந்து நிகழ்ச்சியில் பேசிய பாஸ் கட்சியின் தலைவருமான ஹாடி கூறினார்.

அந்நிகழ்ச்சியில் பாஸ் ஆன்மீக தலைவர் ஹசிம் ஜாசின், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், கிளந்தான் மந்திரி புசார் அஹ்மட் யாக்கோப் மற்றும் பாஸ் உதவித் தலைவர் முகமட் அமர் நிக் அப்ப்துல்லா ஆகியோரும் இருந்தனர்.

-பெர்னாமா