தேள் கொட்டியவுடன் இதை செய்திடுங்கள்: எலுமிச்சையின் அற்புதம் இதோ

limesசிட்ரிக் அமிலம், விட்டமின் C, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து ஆகியவை கொண்டுள்ள எலுமிச்சை பழம் பல்வேறு பலன்களை தரக் கூடியது.

எலுமிச்சை பழத்தை பயன்படுத்துவது எப்படி?
 • தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். இதனால் தேள் கொட்டிய விஷம் உடனே இறங்கிவிடும்.
 • கடுமையான தலைவலி இருக்கும் போது, கடுங்காபியில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடனே குணமாகும்.
 • எலுமிச்சை பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு நல்ல நிவாரணம் பெறலாம்.
 • எலுமிச்சை பழமானது மயக்கம், வாந்தி, குமட்டல், கண் நோய், காது வலி போன்ற பிரச்சனையை குணமாக்க உதவுகிறது.
 • எலுமிச்சை பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால், பித்தம் மற்றும் உடல் உஷ்ணம் குறையும்.
 • ரத்தம் கட்டு இருக்கும் இடத்தில் எலுமிச்சை சாற்றில், கற்றாழையின் உலர்ந்த பாலைக் கலந்து, அதை காய்ச்சி அடிபட்ட இடத்தில் தடவ வேண்டும்.
 • நகச்சுற்று ஏற்பட்டால் எலுமிச்சை பழத்தில் ஒரு துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.
 • எலுமிச்சை பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வறட்டு இருமல் குணமாகும். அதுவே எலுமிச்சை சாறுடன் மோர் கலந்து குடித்தால், ரத்த அழுத்தம் குறையும்.
 • பாதத்தில் ஏற்படும் எரிச்சல் குணமாக, மருதாணியை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவ வேண்டும்.
 • எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நின்று விடும்.
 • எலுமிச்சை பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படுமாரு பிடித்து வந்தால், நீர்பினிசம் குணமாகும்.

-lankasri.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)