பாக் லா: ஃபோரெக்ஸ் மீது ஆர்சிஐ அமைக்கப்பட்டது ஏன் என்று எனக்குத் தெரியும்

badawiமுன்னாள்  பிரதமர்  அப்துல்லா   அஹமட்   படாவியிடம்    பேங்க்   நெகராவின்   அந்நிய   செலாவணி  இழப்புகளை  விசாரிப்பதற்கு   அரச  விசாரணை   ஆணையம்    அமைக்கப்பட்டிருப்பது   குறித்து   வினவியதற்குப்   பதில்   கிடைத்தது.   ஆனால்   அது  பூடகமான  பதிலாக   இருந்தது.

அது  குறித்து   அவர்   விவரிக்க   மறுத்து  விட்டார்.  அவ்விவகாரம்  தொடர்பில்   மேலும்   கேள்விகள்   கேட்கப்படுவதையும்   அவர்   விரும்பவில்லை.

டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  எதிராக    அரசியல்    ஆதாயம்     தேடுவதற்குத்தான்   ஆர்சிஐ   அமைக்கப்பட்டதா   என்று  கேட்டதற்கு,  “அது  பற்றி   நான்  கருத்துச்   சொல்ல வேண்டிய      அவசியமில்லை.  தேவையில்லை”  என்றார்.

ஆணையம்   அமைக்கப்பட்டதன்  நோக்கம்    தெரியுமா   என்றதற்கு,  “தெரியும்,  தெரியும்”,  என்றார்.

மேன்மேலும்    வலியுறுத்திக்   கேட்டதற்கு  “நான்  (ஓய்வு   பெற்று)   நீண்ட  நாளாயிற்று…… (நான்)  எதைப்  பற்றியும்   எதுவும்   சொல்ல   வேண்டியதில்லை”,  என்று   படாவி   கூறினார்.

2003-இல்,  மகாதிருக்குப்  பின்  பிரதமரானவர்   அப்துல்லா  படாவி.  மகாதிரே   அவரைப்  பிரதமராக்கினார்.  ஆனால்,  அதே  மகாதிர்தான்   2009-இல்    அவர்  பதவி  விலகுவதற்கும்  முக்கிய   காரணமாக   இருந்தார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • RAHIM A.S.S. wrote on 11 August, 2017, 14:34

  இந்திய கேரளன் மகாதீர்  VS  இந்தோனேசிய பூகிஸ் நஜிப்
  இதுல சீன ஹய்னான் படாவியை ஒதுக்கி விட்டால் தற்போதைய
  1-MALAYSIA கொள்கைக்கு மரண அடி மற்றும் அவமானம். 
  ஆகவே  சீன ஹய்னான் படாவியை கோத்துவிட ஊடகங்கள் கடும் முயற்சியில் ஈடுபட வேண்டும். 
      

 • Beeshman wrote on 12 August, 2017, 12:27

  அந்நாளில், மாநாடுகளில் நன்றாக “தூக்கம் போடுபவர்” இந்த முன்னாள் பிரதமர் ! உறங்கிக் கொண்டிருப்பவரை திடீரென எழுப்பிக் கேள்விக்கேட்டால் இப்படித்தான் பதில் வரும். அவரை விட்டுவிடுங்கள், உறங்கட்டும் !

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)