ஜோகூர் இரண்டாவது பினாங்கு ஆகும் வாய்ப்பே இல்லை, மந்திரி புசார் கூறுகிறார்

 

Penangsecondnoஇஸ்லாமிய கோட்பாடுகளைக் கொண்ட ஒரு நவீன சமுதாயமாவதற்கான வழிகளை ஜோகூர் வரைந்துள்ளது. அது ஒர் இரண்டாவது பினாங்காவே ஆகாது என்று ஜோகூர் மந்திரி புசார் காலெட் நோர்டின் இன்று கூறினார்.

ஜோகூர். பாகோ அம்னோ தொகுதி கூட்டத்தில் பேசிய அவர், டிஎபியின் கீழ் பினாங்கு மக்கள் மிதவாத கோட்பாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். அது தேசிய ஒற்றுமையையும் சமயக் கோட்பாடுகளையும் சிதைத்து விட்டது என்றார்.

ஜோகூரில் நமக்கு ஒரு சமநிலையுடைய மாநிலம் வேண்டும். நவீனமானது, ஆனால் இஸ்லாமிய கோட்பாடுடையது; மேம்பாடடைந்தது, ஆனால் பண்பட்டது; பொருளாதரத்தில் வலுவானது, ஆனால், நல்ல தரமான வாழக்கையைக் கொண்டது என்று அங்கிருந்த பேராளர்களிடம் அவர் கூறினார்.

இது டிஎபியைப் போன்றதல்ல. அதன் கவனமெல்லாம் பொருளாதார வளர்ச்சி. அதே சமயத்தில், சமுதாய கோட்பாடுகள் மற்றும் சமயக் கோட்பாடுகள் ஆகியவற்றின் மீது எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

ஆகவே, டிஎபி தொடர்ந்து நம்மை தாக்கும். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றாரவர்.

டிஎபியும் அதன் பங்காளிகளும் மலாய்க்காரர்களை உதவாக்கரைகள் என்று கருதுகிறார்கள்.

புதியக் கொள்கைகளை ஆதரிக்கும்படி மலாய்க்காரர்களுக்கு அழைப்புகள் விடுக்கின்றனர்.

நமது நாடு அழிக்கப்பட்டுள்ளது, திவாலாகி விட்டது, செயல்படவில்லை. ஆகவே, நமக்கு புதுக் கொள்கைகள் வேண்டும் என்று டிஎபி கூறுகிறது என்று காலெட் கூறிய போது அங்கிருந்த 600 க்கு மேற்பட்ட பேராளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அவர்களின் கூற்றின் அடிப்படையில் பார்த்தால், டிஎபிதான் மலாய்-முஸ்லிம் தலைவர்களின் பலம் மற்றும் மலாய் அரசியல் வலிமை ஆகியவற்றை மறந்து விட்டதாகத் தெரிகிறது என்றாரவர்.

டிஎபி டிஎபியாகத்தான் இருக்கும். அவர்கள் மலாய்க்காரர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்கள், இஸ்லாத்தின் நலன்கள் போன்றவற்றுக்கு இணங்க மாட்டார்கள் என்று ஜோகூர் மந்திரி புசார் காலெட் மேலும் கூறினார்.