பெர்மாத்தாங் பாவில் 16பிகேஆர் கட்சியினர் கைது

pkr yஇன்று  காலை   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   பெர்மாத்தாங்   பாவுக்கு    வருகை   புரிவதற்கு   முன்னதாக    அங்கு   அவருக்காகக்    காத்திருந்த   பினாங்கு   பிகேஆர்   இளைஞர்   பிரிவைச்   சேர்ந்த   16 பேரை   போலீசார்   கைது   செய்தனர்.

அந்த  16பேரில்  மாநில   பிகேஆர்  இளைஞர்  தலைவர்   அஸ்ரோல்   சானி   அப்துல்   ரசாக்,   செபராங்   பிறை   முனிசிபல்   கவுன்சில்    உறுப்பினர்    ஒங்   ஜிங்  செங்   ஆகியோரும்   உள்ளிட்டிருந்தனர். கைதானவர்கள்   செபராங்  பிறை   போலீஸ்   நிலையம்   கொண்டு    செல்லப்பட்டனர்.

பிரதமரின் விருந்து   நிகழ்வு   நடைபெற  விருந்த   செபராங்   பிறை  போலிடெக்னிக்  கல்லூரியின்   வெளிவாயில்களிலும்   சுற்றுப்பகுதிகளிலும்   பிகேஆர்  பதாதைகள்   நேற்றிரவே   வைக்கப்பட்டிருந்தன.

அவற்றில்  “அன்வார்  இப்ராமை   விடுவிப்பீர்”   என்று    எழுதப்பட்டிருந்தது.

அன்வார்   சிறைவைக்கப்பட்டிருப்பதைக்   கவனப்படுத்துவதே   அக்கூட்டத்தினரின்    நோக்கமெனத்   தெரிகிறது.

அவர்கள்  கைதானதை   மலேசியாவில்   ஜனநாயகத்துக்கு   ஏற்பட்ட  பெரிய  பின்னடைவு   என்று   பிகேஆர்  தகவல்   தலைவர்  பாஹ்மி   பாட்சில்   கூறினார்.

“அது  நஜிப்  ஜனநாயகத்தையும்   பேச்சுரிமையையும்  மதிக்கவில்லை    என்பதைக்   காண்பிக்கிறது.

“அந்த  இளைஞர்கள்   யார்மீதும்   நாற்காலிகளையோ  காலணிகளையோ  விட்டெறியவில்லை,  தங்கள்   அரசியல்   நிலைப்பாட்டை    எடுத்துரைக்கும்    அறிவிப்பு   அட்டைகளை   ஏந்தி  அமைதியாகத்தான்  அங்குக்  கூடியிருந்தனர்.

“அவர்கள்     என்ன,   போலீஸ்  கைது   செய்கின்ற   அளவுக்கு    ஒரு   மிரட்டலாகவா    இருந்தார்கள்?”,   என்றவர்  வினவினார்.