இசாவின் வீட்டில், ஸ்பாட் அலுவலகத்தில் எம்ஏசிசி சோதனை: ரிம100,000 கைப்பற்றப்பட்டதாம்

isaநேற்றிரவு,  மலேசிய     ஊழல்தடுப்பு      ஆணையம்   நெகிரி  செம்பிலானில்   உள்ள   பெல்டா  முன்னாள்-தலைவர்   இசா  அப்துல்   சமட்டின்   வீட்டில்   அதிரடிச்   சோதனை   நடத்தியதில்   ரிம100,000  கைப்பற்றப்பட்டதாகக்  கூறப்படுகிறது.

ஒரு   வட்டாரத்தை     மேற்கோள்காட்டி     இதனைத்    தெரிவித்த      உத்துசான்  மலேசியா  அப்பணம்   ஒரு  இரும்புப்  பெட்டகத்தில்   இருந்ததாகக்  கூறிற்று.

செனாவாங்கில்   உள்ள   அந்த   வீட்டில்   சோதனை   நடத்துவதற்கு  முன்னதாக    செவ்வாய்க்கிழமை,   இசா   கைதான     அதே  நாளில்,   சிலாங்கூரில்  உள்ள    அவரது   வீட்டிலும்   எம்ஏசிசி   அதிரடிச்  சோதனை   நடத்தியது.

இதனிடையே  பெரித்தா  ஹரியான்,  எம்ஏசிசி   அதிகாரிகள்   இன்று   காலை  இசா  இடைக்கால    தலைவராகவுள்ள   நிலப்   பொதுப்  போக்குவரத்து   ஆணைய (ஸ்பாட்) அலுவலகத்துக்கும்   சென்றதாகக்  கூறியது.

இசா,   பெல்டா  இன்வெஸ்ட்மெண்ட்   கார்ப்(எப்ஐசி)   இலண்டனிலும்   கூச்சிங்கிலும்   அதிக  விலை  கொடுத்து   இரண்டு   ஹாட்டல்கள்   வாங்கியது   தொடர்பில்  விசாரணைக்காகத்   தடுத்து   வைக்கப்பட்டிருக்கிறார்.

இசா  பெல்டா   தலைவராக   இருந்தபோது   அக்கொள்முதல்   நடந்துள்ளது. எப்ஐசி   பெல்டாவின்   துணை   நிறுவனங்களில்   ஒன்று.