மகாதிர்: நானே பதவி விலகினேன், சர்வாதிகாரிகள் அப்படிச் செய்வதில்லை

dr mடாக்டர்  மகாதிர்  முகம்மட்,   தம்மை  ஒரு  “சர்வாதிகாரி”  என்று   முத்திரை  குத்துவோர்   2003-இல்  தாமே  முன்வந்து   பிரதமர்  பதவியிலிருந்து   விலகியதை   மறந்து   விடுகிறார்கள்    என்றார்.

சர்வாதிகாரிகள்   பதவியிலிருந்து   தாமே    இறங்குவதில்லை,  ஆயுள்  உள்ளளவும்  பதவியில்   ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.  அவர்களுக்குப்   பின்   அவர்களின்  பிள்ளைகள்   வருவார்கள்.

“நான்   சுய   விருப்பத்தின்பேரில்தான்  பதவி  விலகினேன்.   எனக்குப்  பிறகு   என்  மகன்   வரவில்லை.  கட்சித்  தலைவர்கள்தான்   வந்தனர்.  பதவிக்கு   வந்தவுடனேயே   கட்சியையும்   அரசாங்கத்தையும்    எனக்கு   எதிராகத்     திருப்பினார்கள்.

“எந்தவொரு   சர்வாதிகாரியும்   சுயமாக   பதவி  விலகியதில்லை”,  என்று  மகாதிர்   தம்   வலைப்பதிவில்   பதிவிட்டிருக்கிறார்.

22  ஆண்டுக்காலம்   பிரதமராக   இருந்த  மகாதிர்,  சர்வாதிகாரிகள்   அதிகாரத்தை   இழந்த  பிறகு   மக்கள்     அவர்களை   விடமாட்டார்கள்,  பொங்கி   எழுவார்கள்   தண்டிப்பார்கள்    ஆனால்,  தமக்கு  அப்படி   எதுவும்   நடக்கவில்லை  என்றார்.

“நான்  பதவி  விலகிய   பிறகு   எனக்குப்  பின்வந்தோர்   என்னைத்   தீயவனாகச்  சித்திரிக்க   முயன்றார்கள்,   ஆனால்,   மக்கள்   என்னை   ஏற்றுக்கொண்டார்கள்,  ஆதரவு   கொடுத்தார்கள்.

“என்னைக்  கண்டனம்  செய்வதையே   வாடிக்கையாகக்  கொண்ட    எதிர்க்கட்சிகள்கூட    என்னையும்  நான்   உருவாக்கிய   கட்சியையும்   ஏற்றுக்கொள்ளத்   தயாராக  உள்ளனர்.  என்னையும்   அவர்களின்  தலைவர்களில்  ஒருவராக   தேர்ந்தெடுத்துள்ளனர்.  எந்தச்   சர்வாதிகாரிக்காவது  இப்படிப்பட்ட   அனுபவம்   உண்டா?”,  என்றவர்