காணி விடுவிப்பு: சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று கோரி சம்பந்தன் கடிதம்!

sambanthan-001இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனக் இரா. சம்பந்தன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்கள் உள்ளிட்ட தரப்புக்களுக்கே குறித்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.

அதில், தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்திற்கு சாதகமான சமிக்ஞை அல்ல எனத் தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள். எனவே, காணி விடயம் தொடர்பில் சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் கோப்பாபுலவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலையில், அம்மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இரா.சம்பந்தன் கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்துக்கு சரியான பதில் கிடைக்காத நிலையில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை அவர் நாடியுள்ளார்.

-puthinamnews.com

TAGS: