‘ஹிடுப் துன்’ முழக்கம் கப்பளா பத்தாஸ் நகரை அதிர வைத்தது

dr mபினாங்கில்  உள்ள   கப்பளா   பத்தாஸ்  ஒரு    காலத்தில்   மலேசியாவின்  ஐந்தாம்   பிரதமர்  அப்துல்லா   அஹமட்  படாவியின்  கோட்டை.  அது  பரபரப்போ   சுறுசுறுப்போ இன்றிதான்  காட்சியளிக்கும்.  ஆனால்,   நேற்று    அந்தத்    தூங்கமூஞ்சி   நகரம்   பரபரப்பாகக்   காணப்பட்டது.

அங்கு   பார்டி  பிரிபூமி   பெர்சத்து   மலேசியா  தலைவர்களும்   ஆதரவாளர்களும்   திரண்டிருந்ததுதான்   இதற்குக்  காரணம்.    அங்கு   அக்கட்சிக்  கூட்டமொன்று   நடந்தது.  அதில்   உரையாற்றிய  பெர்சத்து    அவைத்  தலைவர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்   தலைவர்   முகைதின்   யாசினும்    கப்பளா   பத்தாஸ்   மக்கள்    பக்கத்தான்   ஹராபானுக்கே   வாக்களிக்க   வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டனர்.

“நாட்டை    மூர்க்கர்களும்  கொள்ளையரும்   ஆள்வதற்கு   அனுமதிக்காதீர்கள்”,  என்றார்  மகாதிர்.

மலேசியா,  பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்,  அப்துல்லா  ஆகியோரின்   ஆட்சிக்கு  முன்னர்   எப்படி   இருந்ததோ  அந்த   நிலையைத்   திரும்பக்   கொண்டு  வரப்போவதாக  மகாதிர்   வாக்குறுதி   அளித்தார் .

கூட்டத்தினர்  அவரது  உரையைக்  கேட்டு  “ஹிடுப்   துன்(வாழ்க  துன்)”   என்று  முழங்கினர்.

தாம்  92வயதுக்  “கிழவன்”   என்பதையும்  மகாதிர்   அவர்களுக்கு  நினைவுறுத்தினார்.

“என்னால்   நீண்ட  நேரம்   பேசவோ   நிற்கவோ  முடிவதில்லை. ஆனாலும்,  என்னால்  நிறைய  வேலைகளைச்  செய்ய  முடியும்”,  என்றவர்  கூறியதைக்   கூட்டத்தினர்   ஆரவாரம்   செய்து    வரவேற்றனர்.

பெர்சத்து  கட்சிக்கு   ஆதரவில்லை   என்று  கூறப்படுவதை   மறுத்த   அவர்,  அங்கு  வந்துள்ள   கூட்டமே   அதற்குச்   சான்று   என்றார்.