உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்த நிர்வாகம்: ”40 கி.மீ தூரம் குழந்தையை தூக்கி சென்ற தாய்”

jarkandஜார்கண்ட் மாநிலம் குமுலா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 வயது குழந்தை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதனையடுத்து குழந்தையை தனது சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அந்த குழந்தையின் தாய் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ச் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இறந்த குழந்தையை தூக்கிக்கொண்டு சுமார் 40 கி.மீ தூரம் தனது சொந்த ஊருக்கு அந்த பெண் நடந்தே சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.என். யாதவ் கூறியதாவது:

குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த குழந்தையை அந்த தாய் எடுத்து சென்றுவிட்டார். வேறு எந்த மருத்துவமனையிலும் அந்த குழந்தை சிகிச்சைபெறவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ஒரு கைகுழந்தையுடன் பெண் ஒருவர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையில்  பொதுமக்களிடம் குழந்தை இறந்ததை காட்டி வேனில் உடலை கொண்டு செல்வதற்கு  பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

-dailythanthi.com

TAGS: