மகாதிரைச் சாடுவதற்காக மெமாலி சம்பவம் தோண்டி எடுக்கப்படுகிறதா? துவான் இப்ராகிம் மறுப்பு

ibrahimபாஸ்   கட்சி   இப்போது  எதிரணியின்   முன்னணியில்  உள்ள   டாக்டர்   மகாதிர்  முகம்மட்டைத்   தாக்குவதற்குதான்    கிடப்பில்  கிடந்த  மெமாலி    விவகாரத்தைக்     கையிலெடுத்துக்  கொண்டிருக்கிறது     என்று   கூறப்படுவதை   அக்கட்சித்   தலைவர்   ஒருவர்  மறுத்தார்.

முப்பதாண்டுகளுக்கு  முந்திய   மெமாலி  சம்பவம்மீது   அரச  விசாரணை   ஆணையம்(ஆர்சிஐ)   தேவை   என்று  பாஸ்   கட்சி   கோரிக்கை  விடுத்திருப்பதைத்    தற்காத்துப்    பேசிய    அதன்    துணைத்    தலைவர்    துவான்  இப்ராகிம்    அது   நீதிக்காக   நடத்தப்படும்   போராட்டம்   என்றார்.

“பாஸுக்கு   மகாதிரையோ      வேறு   தனிப்பட்டவர்களையோ   தாக்கும்   நோக்கம்   கிடையாது.

“நாங்கள்   எந்தக்   கட்சியின்மீதும்     குற்றச்சாட்ட  விரும்பவில்லை,    நீதிக்  கோட்பாடு   நிலைநிறுத்தப்படுவதையே  விரும்புகிறோம்”,  என்றாரவர்.

அதுவே  அரசியல்  முதிர்ச்சியின்   அடையாளம்   என்றும்   அவர்   சொன்னார்.